‘பஞ்சதந்திரம்’ படம் உருவானதற்கு பின்னாடி இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா? தந்திரமாக தப்பிச்ச தயாரிப்பாளர்
Actor Kamal: தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வளரும் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாகவே பார்க்கப்படுகிறது. சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்படும் இளைஞர்களுக்கு தேவையான அத்தனை அம்சமும் கமல் படத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல் புதிய புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி சினிமாவின் போக்கை மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரராக கமல் திகழ்கிறார். இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் எதாவது ஒரு தொழில் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியவராக எப்போதுமே கமல் இருப்பார்.
இதையும் படிங்க: வடிவேலுவுடன் ஃபகத் இணையும் படத்தின் கதை இதுதான்… இதில் வைகைப்புயல் ஜோடி யார் தெரியுமா?
இந்த நிலையில் கமல் நடித்த படங்களில் மிகவும் நகைச்சுவையான குடும்பங்களை கவர்ந்த படமாக அமைந்த திரைப்படம் ‘பஞ்சதந்திரம்’. இந்தப் படத்தில் கமலுடன் யூகி சேது, ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமான், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான படம்தான் இது.
படமுழுக்க நகைச்சுவையில் கலக்கியிருப்பார் கமல். ஆனால் இந்தப் படம் உருவான கதையை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க. இந்தப் படம் எடுப்பதற்கு முன் இதன் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் கமலை வைத்து நரேன் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்க நினைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மீது வந்த கோபத்தில் அதிரடி முடிவெடுத்த சின்னப்ப தேவர்!.. உருவான சூப்பர் ஹிட் படம்…
அதில் கமல் கொரில்லா வேடமிட்ட கதாபாத்திரமாம். அதனால் கொரில்லாவின் பழகும் விதம், அதன் பாவனை எல்லாவற்றையும் அறிய வெளி நாடு சென்று கொரில்லாவை பற்றிய ஆராய்ச்சியில் இருந்தாராம். கொரில்லா மாதிரியான மேக்கப் போட அமெரிக்காவில் இருந்து டெக்னிஷியன்களை வரவழைக்க 1.75 கோடி தேவைப்பட்டதாம்.
அதுமட்டுமில்லாமல் உண்மையான கொரில்லாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம். அதனால் ஒரு கொரில்லாவை அழைத்து வரவேண்டுமென்றால் அதற்கென்று ஒரு தனி இடம், அதற்கான செலவு என அதுக்கே 1 கோடி கிட்ட செலவாகுமாம்.
இதையும் படிங்க: மீனாவை அக்காவா நினைச்சு தானே காசு கொடுத்தாங்க ஸ்ருதி… இதுக்கு ஏன்யா கத்துறீங்க..!
அந்த நேரத்தில் தான் ஆளவந்தான் படம் ரிலீஸ் ஆக அது சரிவர போகாததால் இந்த நேரத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்து அதுவும் ஓடவில்லை என்றால் என்ன பண்ணுவது என நினைத்தே கமலிடம் சொல்லி இதை டிராப் செய்திருக்கிறார்கள். அதற்கு பிறகு பஞ்ச தந்திரம் கதையை கையில் எடுத்தார்களாம்.