ஜெயிலர் இவ்வளவு ஹிட் ஆனதுக்கு 4 விஷயம்தான் காரணம்!.. புட்டு புட்டு வைக்கும் திரையுலகம்....

by சிவா |
jailer
X

தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் ஏற்ற இறக்கம் என்பது வரும். எம்.ஜி.ஆர், சிவாஜி கூட தோல்விப்படங்களை கொடுத்துள்ளனர். ஆனால், அதேநேரம் எம்.ஜி.ஆரின் படங்கள் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுதியது இல்லை. அதேபோலத்தான் ரஜினியும்.

கிட்டத்தட்ட 40 வருடங்கள்க்கும் மேல் சினிமாவில் இருக்கிறார். அவரின் நடிப்பில் உருவான படங்கள் நஷ்டத்தை சந்தித்தது இல்லை. ஆனால், அவர் தயாரிப்பில் வெளிவந்த பாபா திரைப்படம் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது. எனவே, வினியோகஸ்தர்களுக்கு அந்த நஷ்டத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி. திரையுலகில் அதை துவங்கி வைத்தவர் அவர்தான். இப்போதுவரை கூட யாரும் அதை செய்யவில்லை.

இதையும் படிங்க: பீஸ்ட்ல விட்டத ஜெயிலர்ல புடிச்சிட்டியே நெல்சா!.. நெகிழ்ந்து போன கலாநிதி மாறன்.. வெயிட்டான கவனிப்பு!

பாபாவுக்கு பின் ரஜினியின் நடிப்பில் வெளியான குசேலன், லிங்கா, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. எனவே, விஜய்தான் சூப்பர்ஸ்டார் என அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலும் சிலர் பேச துவங்கினார். ஏனெனில், ரஜினியை விட விஜய் அதிக சம்பளம் வாங்கும் இடத்திலும் இருந்தார்.

இதை மனதில் வைத்துதான் ரஜினி ஜெயிலர் பட விழாவில் பருந்து - காக்கா கதையை சொன்னார். அவர் பேசிய அந்த அரைமணி நேரம் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. யார் மனதும் புண்படாமல் நேர்த்தியாக பேசியிருந்தார். அதேமேடையில், ரஜினியை பாராட்டி சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பேசியது விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, ஜெயிலர் படத்தை காலி பண்ணுவோம் என சொல்லி சமூகவலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர்.

இதையும் படிங்க: அரவிந்த்சாமி அப்பாக்கு ரஜினி கொடுத்த மரியாதை! வாயடைத்து நின்ற ‘மெட்டிஒலி’ சிதம்பரம்

ஆனால் ஜெயிலர் படம் வெளியாகி ரூ.600 கோடி வசூலை தாண்டி ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. மொத்தம் ரூ.700 கோடிவரை இப்படம் வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது. இதன் மூலம் தான்தான் சூப்பர்ஸ்ட்டார் என ரஜினி மீண்டும் நிரூபித்துள்ளார். இந்நிலையில், ஜெயிலர் பட ஹிட்டுக்கு 4 விஷயங்கள்தான் காரணம் என திரையுலகினர் சொல்கிறார்கள்.

முதலில் ரஜினியின் கடந்த கால சில படங்கள் ஓடாததால் ஏற்பட்ட அனுதாபம், இரண்டாவது ஜெயிலர் ஆடியோவில் ரஜினியின் பேச்சு ஏற்படுத்திய தாக்கம், மூன்றாவது ரஜினியை கடுமையாக விமர்சித்த விஜய் ரசிகர்கள்.. அதாவது, ‘இவ்வளவு அனுபவும் உள்ள நடிகரை மட்டம் தட்டி பேசுவதா?.. அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்’ என்கிற மனநிலை.. 4வது கடந்த சில வருடங்களாக ரஜினி அரசியல் நடவடிக்கைகளை விட்டு அமைதியாக இருப்பது.

இந்த அளவுக்கு வரவேற்பை பெறவோ.. வசூலை அள்ளி கொடுக்கவோ தகுதியான படம் ஜெயிலர் இல்லை. அது ஒரு சாதாரண படம்தான். பாகுபலி போலவோ, ஆர்.ஆர்.ஆர். போலவோ, கேஜிஎப் போலவே திரைக்கதையில் எந்த மேஜிக்கும் இல்லை. இந்த 4 காரணங்களால் மட்டுமே ஜெயிலர் படம் சூப்பர் அடித்துவிட்டது என்பதுதான் சினிமா பத்திரிக்கையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இதையும் படிங்க: கலாநிதி மாறன் கத்துன கத்துக்கு 10 மடங்கு லாபம் வந்துடுச்சாம்!.. ஜெயிலர் ரியல் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!..

Next Story