18 மணி நேர உழைப்பு வீணாப் போச்சே? ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?
Ajith: கோலிவுட்டில் இப்போது டாக் ஆஃப் தி டவுனாக பேசப்படும் நடிகர் அஜித். ஏனெனில் ஒரே நேரத்தி விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் முழு மூச்சாக நடித்து வருகிறார் என பரபரப்பாக பேசி வந்தனர். விடாமுயற்சி படத்தை பொறுத்தவரைக்கும் எத்தனையோ மேடு பள்ளங்களை கடந்து இன்று இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
தீபாவளிக்கு படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என அஜித் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 16 ஆம் தேதியுடன் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிகிறது. அடுத்த 24 ஆம் தேதியுடன் குட் பேட் அக்லி படத்தின் ஒரு செட்யூல் முடிவடைகிறது.
இதையும் படிங்க: ரஜினி நாயகியிடம் இருக்கும் அஜித்தின் அந்த விஷயம்… அம்மணி கெத்துதான்!
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அஜித் எப்படி உழைத்தாரோ அதே மாதிரியான உழைப்பைத்தான் இப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தெரிவித்தார். அதாவது கடந்த ஒரு வாரமாக 18 மணி நேரம் ஒரே நேரத்தில் விடாமுயற்சி படத்திலும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருவதாக தெரிவித்தார்.
காலையிலிருந்து மாலை வரை விடாமுயற்சி படத்திற்கும் மாலையில் இருந்து இரவு வரை குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருவதாக கூறியிருந்தார். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இதையும் படிங்க: படத்தில் நடிக்கும் போது 8ம் வகுப்பு மாணவி! டீச்சர் கேரக்டரா? யாருப்பா அந்த நடிகை?
குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே தேதியையும் அறிவித்துவிட்டார்கள். அதிலிருந்தே படக்குழு தீவிரமாக செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இப்போது வந்த தகவலின் படி குட் பேட் அக்லி படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாது என்று சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பதும் கூடிய சீக்கிரம் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஆடியோ லான்ச்சுக்கு நோ… சக்சஸ் மீட்னா ஓகே.. விஜய் போடும் ஸ்கெட்ச்!…
ஆனால் இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் குட் பேட் அக்லி படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே அதே தேதியில் தான் ரஜினியின் கூலி திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதற்கு முன் பேட்ட மற்றும் விஸ்வாசம் போன்ற படங்கள் ஒரே தேதியில்தான் ரிலீஸ் ஆனது. அதே போல் ஒரு போட்டி மீண்டும் இந்தப் படங்களில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.