விஜய் மகனுடன் இணைய போகும் பிரபலம் இவர்தானாம்… அதான் அந்த படத்துல இருந்து அப்பீட் ஆகிடீங்களா!...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்யின் மகன் ஜெசன் சஞ்சய். இவர் தனது சிறு வயது முதலே தனது அம்மா வழி பாட்டி தாத்தாவுடன் தான் வளர்ந்து வருகிறார். இவரின் பள்ளி முதல் கல்லூரிபடிப்பு வரை அனைத்துமே லண்டனில்தான். இவரின் தாத்தா மற்றும் சங்கீதாவின் தந்தையுமான சோமலிங்கம் லண்டனில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்.
ஜெசனுக்கு ஒரு சகோதரியும் உண்டு. அவரை நாம் தெறி பட கிளைமாக்ஸில் காணலாம். ஜெசன் அவ்வப்போது தனது தந்தையின் படத்தில் நடித்ததும் உண்டு. போக்கிரி படத்தில் வரும் ஆடுங்கடா என்ன சுத்தி பாடலில் இவர் தனது தந்தையுடன் இணைந்து நடனமாடியிருப்பார்.
இதையும் படிங்க:மகனை களம் இறக்கி விஜயின் கோபத்திற்கு ஆளான லைக்கா!.. அட இது அவருக்கே தெரியாதாம்!…
மேலும் தற்போது இவருக்கும் இவரது தந்தைக்கும் பெரிய அளவில் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. 23 வயதாகும் ஜெசன் தற்போது தனது சொந்த முயற்சியினால் இயக்குனராக வலம் வரவிருக்கிறார். இதற்கான படிப்பினையும் லண்டனில் படித்துள்ளார். மேலும் இவரின் முதல் படத்திற்கு இவருக்கு லைக்கா நிறுவனம் வாய்ப்பினை கொடுத்துள்ளது.
ஆனால் இவர் இயக்குனராக ஆவதற்கு விஜய் எந்தவொரு சிபாரிசும் செய்யவில்லையாம். தனது சொந்த முயற்சியினாலேயே இவர் இந்த தொழிலில் இறங்கியதாக தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க இவரின் தாத்தாவின் செல்வாக்கினாலேயே இவருக்கு லைக்கா நிறுவனம் வாய்ப்பு கொடுத்ததாக மற்றொருபுறம் பேசப்படுகிறது.எது எப்படியோ அப்பனுக்கு பிள்ளை சலைத்தவன் அல்ல என்பதை ஜெசன் நிரூபித்துவிட்டார். இவர் தற்போது தான் இயக்கவிருக்கும் முதல் படத்திற்கான கதாநாயகனை தேடிவருகிறார். இவரின் கதைக்கு கவின், அதர்வா, ஹரிஷ் கல்யாண் போன்ற பிரபலங்கலிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க:ரஜினி பால் போட்டா பேட்டை தூக்கிட்டு ஸ்டம்பை காட்ட மாட்டேன்!.. தலைவர் 171 பற்றி பேசிய கமல்!..
ஆனால் தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் இவரின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஹரிஷ்கல்யாண். இவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஹரிஷ் கல்யாண் இயக்குனர் எலன் இயக்கத்தில் தயாராகவுள்ள ஸ்டார் திரைப்படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அதன்பின் இப்படத்திற்கான போஸ்டர்களில் கவினை காண முடிந்தது. அதற்கு காரணம் இவர் அப்படத்தில் இருந்து விலகியதாகவும் ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இதனை பற்றிய எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை கிடைக்கவில்லை. ஹரிஷ் கல்யாண் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக நெட்டிசன்கள் மத்தியில் கருத்துகள் நிலவுகின்றன.
இதையும் படிங்க:அடி மேல விழும் அடி!.. ஆடிப் போய் கிடக்கும் வி எழுத்து நடிகர்.. ஹாட்ரிக் தோல்வினா தாங்க முடியாதே!..