விஜய் இடத்தை பிடிக்க சரியான ரூட்டை பிடித்த சிவகார்த்திகேயன்! 2026க்குள் இவர்தான் டாப்

Published on: July 3, 2024
siva (1)
---Advertisement---

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் அடுத்தடுத்து இருப்பதாக தெரிகிறது. தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் படங்களில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தின் கமலின் தயாரிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் அமரன்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த பிறகு அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தின் டைட்டில் வெளியாகும் என தெரிகிறது. ஒரு பக்கம் ஏ ஆர் முருகதாஸ் ஹிந்தியிலும் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை எடுத்து வருகிறார். மும்பையில் அந்த படத்திற்கான ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. அங்கு கிடைக்கும் பிரேக்கில் சிவகார்த்திகேயன் படத்திலும் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க:  ஒரு முறை சொல்லிட்டா பின்வாங்குறதே இல்ல! தொடர்ந்து கேப்டன் குடும்பத்துக்காக உதவிக்கரம் நீட்டும் லாரன்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து இரு படங்கள் காத்திருக்கின்றன. இந்த நிலையில் அமரன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் இவற்றைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறாராம் .

இப்படி அடுத்தடுத்து தன்னுடைய லைன் அப்பை சீராக தக்க வைத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். வெங்கட் பிரபு தற்போது கோட் படத்தில் பிஸியாக இருப்பதால் அந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் எல்லாம் முடிந்து அக்டோபர் மாதத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் டான் படத்தை கொடுத்த சிபி சக்கரவர்த்தியும் சிவகார்த்திகேயனக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: ‘தல’யோட வார்த்தைக்காகத்தான் வெயிட்டிங்! புது குண்டா தூக்கிப் போட்ட எச்.வினோத்

இதுபோக சுதா கொங்கராவுடனும் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே வரிசையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக் கதையிலும் சிவா நடிப்பதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. இப்படி அடுத்தடுத்து எக்கச்சக்கமான படங்களை கைவசம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் நான்கு வருடங்களுக்கு மிகவும் பிசியான நடிகராகவே வலம் வருவார் என தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் இப்போது கூறிய இயக்குனர்கள் அனைவருமே நல்ல கதைகளத்துடன் படத்தை எடுப்பவர்கள் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்னொரு பக்கம் அடுத்த விஜய் சிவகார்த்திகேயனா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் இவர் கூட்டணி அமைக்கும் அடுத்தடுத்த இயக்குனர்கள் இவரை ஒரு டாப் ஹீரோவாக உச்சத்தில் வைத்து விடுவார்கள் என்று தான் தோன்றுகிறது. அதனால் அஜித்துக்கு போட்டியாக விஜய் இடத்தை பிடித்து விடுவார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கமலுக்கும் ஷங்கருக்கும் முரண்பாடு… ஆனா அவருக்கிட்ட அது இல்லையே…? என்னய்யா இங்க நடக்குது?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.