வடிவேலு படத்தில் நாகேஷுக்கும் பிரச்சினையா? அச்சச்சோ இப்படியெல்லாம் நடந்துச்சா?
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவான்கள் பல பேர் இருந்து மறைந்திருக்கின்றனர். அந்த வகையில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் நாகேஷ். சினிமாவிற்கு வருவதற்கு முன் தான் பார்த்துக் கொண்டிருந்த ரயில்வே வேலையை உதறித்தள்ளிவிட்டு சினிமா மீதுள்ள ஆர்வத்தால் வந்தார்.
இவர் வந்த புதிதில் ஆரம்பத்தில் இவருக்கான சம்பளம் வெறும் 90 ரூபாய்தானாம். இவர் நினைத்திருந்தால் இந்த 90ரூபாய்க்கு இங்கு இருக்கிறதை விட பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கே சென்று விடலாம் என நினைத்திருக்கலாம்.
ஆனால் நாகேஷ் அதை செய்யவில்லை. காரணம் சினிமா மீது அவருக்கு இருந்த காதல். இவரையும் ஆரம்பத்தில் உருவ கேலிகள் எல்லாம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் நாகேஷ் கொஞ்சம் கூட அசரவே இல்லை. இன்னும் ஒரு படி மேலாக ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.
அதிலும் அவர் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிப்பு மட்டுமில்லாமல் நடனத்திலும் மன்னனாக விளங்கினார் நாகேஷ். ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார் நாகேஷ்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நடித்தார் நாகேஷ். அதுவும் அவரின் ஆஸ்த்தான திரை ஜோடியான மனோரமாவுடனே இந்தப் படத்திலயும் ஜோடியாக நடித்தார். ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும் போதே அவருக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் தான் இருந்ததாம்.
இந்தப் படத்தின் இயக்குனரான சிம்புதேவன் நாகேஷை பற்றிய ஒரு ரகசியத்தை கூறினார். அதாவது எப்பொழுதுமே நாகேஷ் அவர் நடிக்கும் படங்களில் கார்ட்டூன் கதாபாத்திரமான டாம் மாதிரியே துருதுருவென இருப்பவர். ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு வசனங்கள் கூட நியாபகம் இல்லையாம். மறந்து மறந்து போய்விடுவாராம்.
கூட இருந்த மனோரமா தான் டையலாக் சொல்லும் போது சைலண்டாக அருகில் இருந்து எடுத்துக் கொடுப்பாராம். அதை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது என சிம்புதேவன் கூறினார்.
இதையும் படிங்க : பணம் இருந்தால் பாட்ஷாதான்! சங்கருக்கு கமல் கொடுத்த வாட்ச்சின் விலை என்ன தெரியுமா?