சூர்யாவுக்கு விரிச்ச வலையில சிக்கிய அமீர்… பருத்திவீரனில் நடந்தது இதுதான்!...

by amutha raja |   ( Updated:2023-12-06 21:33:43  )
paruthiveeran issue
X

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானவர் அமீர். இப்படம் சூர்யாவுக்குமே சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்து கிடைக்க காரணமாய் அமைந்தது. அதைபோல் இவர் தம்பியான கார்த்தியின் பருத்தி வீரன் திரைப்படத்தை இயக்கியது அமீர்தான்.

கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அண்ணன் தம்பி என இருவரையும் வளர்த்துவிட்ட இயக்குனர் அமீருக்கு தற்போது இப்படி ஒரு நிலைமையா என கேட்கும் அளவிற்கு மிகப்பெரிய அநியாயம் நடந்துள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை ஆரம்பத்தில் ஞானவேல்ராஜா தயாரித்ததாகவும் ஆனால் படத்தின் இடையிலே அவர் கையை விரித்துவிட்டு சென்றதாகவும் அமீர் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:சூர்யா படத்தில் நேர்ந்த சோகம்!.. ரோட்டுல நின்னு கதறி அழுத சினேகன்!.. கை கொடுத்த அமீர்..

பின் மீதிப்படத்தை அமீர்தான் சசிகுமார் உள்ளிட்ட பலரிடம் கடன் வாங்கி எடுத்து முடித்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் ஞானவேல்ராஜாவோ இதற்கு முரணாக பேட்டி கொடுத்திருந்தார். தற்போது அமீர் அப்படத்திற்காக தான் செலவு செய்த தொகையை தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால் உண்மையிலேயே ஞானவேல்ராஜா அப்படத்தில் இருந்து விலகியது அமீரை பழிவாங்கவேண்டும் என்பதற்காக இல்லையாம். ஞானவேல்ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரின் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமென்றும் மேலும் சூர்யாவின் குடும்பத்தினர்தான் ஞானவேல்ராஜாவை பினாமியாக உபயோகப்படுத்தினர் என்ற தகவல்களும் வெளியாகின.

இதையும் வாசிங்க:ஓவரா பண்ணக்கூடாது!.. அமீர் மட்டும் நினைச்சிருந்தா!. ஞானவேல் ராஜாவை பொளந்துகட்டும் தயாரிப்பாளர்..

பொதுவாக சூர்யாவிற்கும் ஞானவேல்ராஜாவிற்கு இடையே அடிக்கடி சண்டைகள் வருவதும் இயல்பே. இது அமீர் வாழ்க்கையில் விளையாட ஒரு சம்பவம் காரணமாக அமைந்துள்ளது. பருத்திவீரன் திரைப்படம் தயாராகி கொண்டிருக்கும்போது சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் திரைப்படமும் தயாராகி கொண்டிருந்தது.

ஆனால் ஞானவேல்ராஜாவிற்கு சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையினால் சூர்யாவை பழிவாங்கும் எண்ணத்தில் அவரது தம்பி கார்த்தியின் முதல் படமான பருத்திவீரனில் இருந்து ஞானவேல்ராஜா விலகினாராம். ஆனால் இதனால் சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டது என்னமோ அமீர்தான் என பிரபல யூடியூபரான பிஸ்மி சமீபத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதுதான் அமீரின் பிரச்சினைக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.

இதையும் வாசிங்க:இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு!. அலைபாயுதே ஸ்டைலில் பிட்டு போட்டு ஷாலினியை கவுத்த அஜித்…

Next Story