Cinema News
சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டேன்… ஹீரோவான காரணத்தை உடைத்த அமீர்…
Director Ameer: தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் இயக்குனர்தான். இயக்குனரின் கதையிலேயே ஒரு நடிகரின் வெற்றி இருக்கிறது. அந்த வகையில் குறைந்த அளவு படங்களையே இயக்கியிருந்தாலும் தனக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கியவர்தான் இயக்குனர் அமீர்.
இவர் சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய அறிமுகமானார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. மேலும் இவர் சூர்யாவின் தம்பியான கார்த்தியை வைத்து பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார்.
இதையும் வாசிங்க:வாய்ப்பு கொடுத்தவரையே வாரிவிட்ட சரவணன்!… சித்தப்பு இது ரொம்ப தப்பு….
இப்படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் இயக்கத்தின் போது இவர் பல இன்னல்களையும் சந்தித்துள்ளார். இப்படத்தை முதலில் ஞானவேல் ராஜா தயாரிக்கவிருந்ததாகவும் படத்தின் இடையிலேயே அவர் முடியாது என கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பின் அமீர் சமுத்திரகனி, சசிகுமார் உதவியினால் அப்படத்தை முடித்ததாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பருத்திவீரன் திரைப்படம் இவருக்கு பெரிய தலைவலியை தந்தது என்றே கூறலாம். இப்படத்திற்குபின் இவர் யோகி திரைப்படத்தை இயக்கினார். அப்படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். ஆனால் அவர் அப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுக்கு பின் ஒரு காரணமும் உள்ளதாம்.
இதையும் வாசிங்க:டப்பிங்கிற்கு வர மறுத்த பிரியாமணி… காண்டான அமீர்.. அதுக்காக இப்படியா சார் பண்ணுவீங்க!
பருத்திவீரன் போன்ற வெற்றிப்படத்தை கொடுத்தாலும் தனக்கு அதற்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும், மேலும் கார்த்தி போன்ற புதுமுக நாயகனை வெற்றி அடைய வைப்பதற்கு தான் மேற்கொண்ட விஷயங்களுக்கும் எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டுள்ளார்.
அப்போது சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் உண்டு என எண்ணிய அமீர் யோகி திரைப்படத்தின் மூலம் தன்னை கதாநாயகனாக காட்டியுள்ளார். ஆனால் அப்படம் இவருக்கு தோல்வியை தழுவியே கொடுத்தது. இதனால் அமீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரே தனது சொந்த காசிலேயே சூனியம் வைத்து கொண்டதாக கூறியிருந்தார். மேலும் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் எனும் ஆசையெல்லாம் இருந்ததில்லை எனவும் பருத்திவீரனின் தாக்கமே தான் கதாநாயகனாக நடிக்க காரணம் எனவும் கூறியிருந்தார்.
இதையும் வாசிங்க:பருத்திவீரன் படத்துக்கு நீங்களா தயாரிப்பாளர்?.. ஞானவேல் ராஜாவின் நாக்கை பிடுங்கிய சமுத்திரகனி!..