இந்த படம் எடுத்துதான் நாசமா போனேன்!.. ஃபிலிங்ஸ் காட்டும் கவுதம் மேனன்....

Gautham Vasudev menon: கெளதம் வாசுதேவமேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்குனராய் மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் வலம் வருகிறார். இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தன. மேலும் இவர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் இவரது வாழ்வில் பல மற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த மரணம்!. அதிர்ச்சியில் படக்குழு!.. சோதனை மேல் சேதனை…

இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் இவரே. இப்படத்தின் தயாரிப்பின் போது இவர் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக இவர் தான் ஆசையாய் கட்டிய வீட்டையே விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இவர் இத்தகைய நஷ்டத்தை சமாளிக்கவே சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததாகவும் அதில் வரும் தொகையை வைத்து துருவ நட்சத்திரத்தினை இயக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 'துருவ நட்சத்திரம் மட்டும் எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் நான் இயக்குனராகவே இருந்திருப்பேன். ஆனால் இந்த சுமையும் தனக்கு ஒரு சுகமான விஷயமாக இருக்கிறது’ என அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:லியோ FDFS பார்க்க ரெடியான ரஜினிகாந்த்!.. பின்ன அடுத்த படத்தை லோகேஷை நம்பி கொடுத்துருக்காரே!..

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படமான லியோவில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

ஏற்கனவே காக்க காக்க, அச்சம் என்பது மடமையடா, விடுதலை போன்ற திரைப்படங்களில் போலிஸாக நடித்த இவர் தற்போது லியோ திரைப்படத்திலும் போலீஸ் காதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். மேலும் இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனராய் இருந்த இவர் நடிகராய் மாறியதற்கு இப்படமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இதையும் வாசிங்க:படையப்பாவுக்கு பரிசாக கிடைத்த ஆறுபடையப்பா!.. சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த ஆசிர்வாதம்.. வைரலாகும் பிக்ஸ்!

Related Articles
Next Story
Share it