யாரோ சொல்லப் போய் ரஜினி படத்தை சொதப்பிய பாரதிராஜா! பட தோல்விக்கு இதுதான் காரணமா?
Actor Rajini: 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் 16 வயதினிலே. இந்தப் படத்தில் கமல் சப்பானியாகவும் ரஜினி பரட்டையாகவும் நடித்தார்கள். கமலின் நடிப்பு பேசப்பட்டாலும் பரட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினியை அண்ணாந்து பார்க்க வைத்த படமாக 16 வயதினிலே படம் அமைந்தது.
அந்தப் படத்திற்கு பிறகு ரஜினியும் பாரதிராஜாவும் இணைந்து கூட்டணி அமைத்த படமாக கொடி பறக்குது திரைப்படம் அமைந்தது. ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். இப்போது கொடி பறக்குது திரைப்படத்தில் நாம் பார்க்கும் கதையை முன்பு பாரதிராஜா உருவாக்கவில்லையாம்.
இதையும் படிங்க: 9வது நாளிலும் தெறிக்கவிடும் ஷாருக்கான்!.. அந்த மொட்டை தலை தான் ஹைலைட்.. ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் இதோ!
பிரதமரின் அலுவலகத்தில் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் கதாநாயகன். பிரதமரை காப்பாற்றுவதே அவர் வேலை. ஆனால் பிரதமரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என துடிக்கும் காதலி. ஆனால் தன் காதலி பிரதமரை கொலை செய்ய வந்திருக்கிறார் என்று தெரியாமலேயே கதாநாயகன் கதாநாயகியின் மீது காதல் கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் கதாநாயகியின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வர கதாநாயகனும் இதற்கு உடந்தையாக இருக்கிறான் என அனைவரும் எண்ண ஆரம்பிக்கின்றனர். கடைசியில் கதாநாயகன் தன்னையும் காப்பாற்றி பிரதமரையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் முதலில் பாரதிராஜாவின் மனதில் இருந்த கதையாம்.
இதையும் படிங்க : யுத்தத்தை விட ரத்தத்துக்குத்தான் அதிக பவர்! ஒரே நிமிஷத்துல தட்டி தூக்கிய லோகேஷ்! பரிதவிக்கும் ‘ரஜினி170’
இந்தக் கதையை கதாசிரியர் ஆர்.செல்வராஜிடம் சொல்ல செல்வராஜும் இந்தக் கதை அற்புதமாக இருக்கிறது. இதையே படமாக்குங்கள் என்று சொல்லிவிட்டு வேறொரு படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுவிட்டாராம்.
அதற்குள் இந்தப் படத்தின் கதை நன்றாக இல்லை என ஒரு சில பேர் சொல்ல முழுக் கதையையும் மாற்றிவிட்டார் பாரதிராஜா. படமும் வெளியாகி ஊரிலிருந்து திரும்பி வந்த செல்வராஜ் படத்தை பார்த்திருக்கிறார். ரஜினியின் நடிப்பு அற்புதம். பாரதிராஜாவின் இயக்கமும் மிக அருமையாக இருக்கிறது. ஆனால் கதை எங்கே? என கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஆடியோ ரிலீஸில் நம்ம பவர் தெரியணும்… ஆனா பீதியாவும் இருக்கே.. கலவரத்தில் இருக்கும் தளபதி கூடாரம்!
ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றையும் என்னிடம் சொல்லியே செய்த பாரதிராஜா கதையை மாற்றிவிட்டேன் என்பதை மட்டும் என்னிடம் சொல்லவில்லை என்று கொஞ்சம் ஆர் .செல்வராஜ் வருத்தப்பட்டாராம். இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் ட்ரீட்டாக அமைந்தாலும் வசூலில் கொஞ்சம் மண்ணை கவ்வியது என்றுதான் சொல்லவேண்டும். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.