Connect with us
sethu

Cinema News

கமலுக்கு அடுத்த படியாக அந்த ஒரு விஷயத்தில் இவர்தான்! சரத்குமாரை அடுத்து அடுத்த புரளியை கிளப்பிய அபிராமி

Actor Vijaysethupathi: முன்னனி நடிகர்கள் சேர்த்து வைத்த புகழை அடுத்த இளம் தலைமுறை நடிகர்கள் வந்து காப்பாற்றுவது உண்டு. அதாவது சினிமாவை நன்முறையில் கொண்டு செல்லும் பொறுப்பு அடுத்து வரும் தலைமுறையினருக்கு இருக்கின்றது. ஆனால் பிற நடிகர்களின் பட்டத்தை பறிப்பது என்பது ஒரு தவறான செயலாகும்.

ஆனால் இதுவரைக்கும் விஜயோ அல்லது மற்ற நடிகர்களோ மற்றவர்களின் பட்டத்தை தானாக பெற முயலவில்லை. அதுவும் சமீபகாலமாக போய்க் கொண்டிருக்கும் பிரச்சினை விஜய்க்கும் ரஜினிக்கும் இடையே இருக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பிரச்சினைதான். ஆனால் அதை முதலில் ஏற்றி வைத்து வேடிக்கைப் பார்த்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் வாலியிடம் போட்ட கண்டிஷன்..வாலியோட ரியாக்‌ஷன் என்னனு தெரியுமா!..

தற்போது நடிகை அபிராமியும் கமல் குறித்த ஒரு தகவலை கூறியிருக்கிறார். விஜய்சேதுபதி மற்றும் நடிகை அபிராமி நடிக்கும் படம் மகராஜா. விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் 50 வது படமாக அமைய இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அபிராமி விஜய்சேதுபதியின் தீவிரமான ஒரு ரசிகை தான் என்று கூறினார்.

எல்லாவித கதாபாத்திரத்தையும் அசால்ட்டாக ஏற்று திறம்பட நடித்து வருகிறார் என்றும்  கமலுக்கு அடுத்தப் படியாக அந்த ஒரு கண்ணை விஜய்சேதுபதியிடம் தான் பார்க்கிறேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஈஷா சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்.. தொடங்கி வைக்கும் அமைச்சர்..

அதாவது கமலுக்கு ஒரு தீவிரமான கண்ணாக இருக்குமாம். அவர் கண்ணை பார்த்தாலே ஐய்யோ என்று சொல்லும் அளவுக்கு அற்புதமாக இருக்குமாம். அந்த வகையில் கமலுக்கு அடுத்தப் படியாக விஜய் சேதுபதியிடம்தான் அப்படி ஒரு கண்கள் இருக்கின்றது என அபிராமி கூறினார்.

ஏற்கனவே கமல் அபிராமி நடித்து வெற்றி நடைப் போட்ட படம் விருமாண்டி. அந்தப் படத்தில் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரியை பார்த்து ஒரு வேளை இருவருக்கும் அது இருக்குமோ என்று பல வதந்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடைசியில என்ன பலிகடா ஆக்கிட்டானுங்க!.. கலவர பூமியான இசை கச்சேரி.. ரைமிங்கில் புலம்பும் ஏ.ஆர். ரஹ்மான்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top