ஐஸ்வர்யா ராயுடனான விவாகரத்து பிரச்சனைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த அபிஷேக் பச்சன்.. இத காட்டிட்டாரே
Aishwarya Roy: இந்திய சினிமாவில் மிகப்பெரிய முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான் ஐருவர் படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராய்.
எந்தவொரு நடிகைக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்தது. சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே பெரிய பெரிய இயக்குனர் ஜாம்பவான்களுடன் இணைந்து படத்தில் பணியாற்றினார். இருவர் படத்தை தொடந்து ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார்.
இதையும் படிங்க: ஒன்னுல மூணு!… போட்டியில் இறங்கிய ஜோடிகள்… கோபத்தில் எழில்… மயிலு பிரச்னை முடிஞ்சிதா?
அதன் பிறகு ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்தார். மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன், பொன்னியின் செல்வன் என பெரிய பட்ஜெட் படங்களிலேயே நடித்து இன்று நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் இருக்கிறார். திருமணம் முடிந்து இருவரும் ஒன்றாக எங்கு போனாலும் மகிழ்ச்சியான தம்பதிகளாகவே பார்க்கப்பட்டனர். எந்தவொரு விழாவானாலும் இருவரும் கைகோர்த்து இணைபிரியாமல் இருந்து வந்தனர்.
இதையும் படிங்க: 5 வயதிலேயே டியூன் போட்ட யுவன்!.. அதை காப்பி அடித்த இளையராஜா!. அட இது அவரே சொன்னது!…
ஆனால் திடீரென இவர்களுக்கு விவாகரத்து நடக்க போகிறது என்ற ஒரு செய்தி வைரலாகி ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பெரிய அதிர்ச்சியை தந்தது. அதற்கேற்ற வகையில் இவர்களின் செயல்பாடுகளும் இருந்து வந்தன. ஒரு சில விழாக்களில் இருவரையும் தனித்தனியாகவே பார்க்க முடிந்தது.
ஏன் சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமண விழாவிலும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் மட்டுமே வந்து கலந்து கொண்டார். ஆனால் அமிதாப் பச்சன் தன் மனைவி மற்றும் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து வந்ததை பார்க்க முடிந்தது. இப்படி சின்ன சின்ன சம்பவங்கள் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பாடல்கள் அவ்வளவு சூப்பர்… ஆனாலும் படத்தில் நீக்கிய இயக்குனர்கள்!
இதற்கிடையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சனிடம் பத்திரிக்கை நிருபர்கள் அவருடைய விவாகரத்து பற்றி கேட்க அதற்கு அபிஷேக் பச்சன் தன் கைவிரலில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டி ‘still i married’என பதில் அளித்துவிட்டு சென்றிருக்கிறார்.