அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதற்காக இன்றைக்கே பல பேர் மலேசியாவிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். நெல்சன், அட்லீ, அனிருத் என அடுத்தடுத்து மலேசியாவிற்கு படையெடுத்து வருகின்றனர்.
விஜயும் காலையில் தன் வீட்டில் இருந்து கிளம்பி சென்னை விமான நிலையத்தை அடைந்தார். அவரும் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றார். கூடவே அவருடைய அம்மா ஷோபாவும் செல்கிறார். இந்த விழா எப்படிப்பட்ட விழாவாக இருக்கப் போகிறது என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் விஜயின் கடைசி படம் ஜன நாயகன். அதனால் அவருடைய கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா.
அந்த விழா யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கப் போகிறது என்றும் கூறி வருகிறார்கள். இரண்டு வகையாக இந்த விழா நடைபெற இருக்கிறது. ஒன்று இசை வெளியீட்டு விழா மற்றொன்று இசை கச்சேரி. அதனால் பல பாடகர்களும் மலேசியாவிற்கு படையெடுத்து வருகின்றனர். விஜயின் ஆரம்பகால படங்களில் பாடிய பாடகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
படத்தில் பாடிய பாடகர்களே நாளை நடக்கப் போகும் கச்சேரியிலும் பாட இருக்கிறார்கள். அதனால் ரசிர்களுக்கு இது ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பாடகர் ஹரீஸ் ராகவேந்தர் மலேசியாவில் ஜன நாயகன் விழா நடக்க போகும் ஸ்டேடியத்தில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். பார்க்கவே மிகவும் பிரம்மாண்டமாக அந்த ஸ்டேடியம் இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை அந்த ஸ்டேடியத்தில் அமரலாம். நாளை நடக்க போகும் விழாவில் கிட்டத்தட்ட 80000 பேருக்கு மேல் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் இவ்வளவு கூட்டம் இருந்தது இல்லை என்றுதான் தகவல். அதனால் இதுவே ஒரு ரெக்கார்ட் என்றே சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பாடகர் ஹரீஸ் ராகவேந்தர் அந்த ஸ்டேடியத்தை வீடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறார். பாடகர் க்ரிஷ், பாடகி அனுராதா ஸ்ரீராம் உட்பட பலரும் வருகை தந்திருக்கின்றனர். விஜயின் புகழ்பெற்ற பாடலான சர்க்கரை நிலவே பெண் நிலவே பாடலை பாடியது ஹரீஷ் ராகவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy to thandhi tv
