வாயாலேயே வட சுடுறத விட்டு செயல்ல காட்டுங்க! ‘லியோ’ படத்துக்கு தயாரிப்பாளர் விடுத்த சேலஞ்ச்

by Rohini |
leo
X

leo

Leo Movie : நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படமாக லியோ திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த படம் வருகிற 19 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வரவிருக்கிறது.

ரசிகர்களில் இருந்து பிரபலங்கள் வரை அனைவரும் லியோ திரைப்படத்தைக் காண ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் , கௌதம் வாசுதேவ் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஸ்க்ரீன் துணியை காணோம்னு பார்த்தா யாஷிகா ஆனந்த் போட்டுருக்காரே!.. உடனே ஜூமிங்தான்!..

வாரிசு , பீஸ்ட் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் எல்லாவற்றிற்கும் சேர்த்து விஜய் லியோ படத்தில் சம்பாதித்து விடுவார் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் விஜயை கோலிவுட்டின் வசூல் மன்னனாகவே பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் லோகேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது.

இதையும் படிங்க: கமல் கூட நடிச்சாலே பிரச்னை தான் போல..! பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்திருக்கும் மாயா மீது மி டூ புகார்!

இந்த நிலையில் லியோ திரைப்படம் ஜெயிலரின் வசூலை முறியடித்து 1000 கோடி வசூலையும் தொட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் முழு மூச்சில் இறங்கியிருக்கிறது. ஆனால் லியோ திரைப்படம் 1000 கோடி வசூலை எல்லாம் தொட முடியாது , அதற்கு வாய்ப்பும் இல்லை என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

1000 கோடி என்பது மிகப்பெரிய தொகை. நார்த் பக்கம் ப்ரோமோஷன் செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் இதுவரைக்கும் நார்த் பக்கம் ப்ரோமோஷனை லியோ படக்குழு செய்யவே இல்லை. அப்படி நார்த் பக்கம் ப்ரோமோஷன் பண்ண வேண்டுமென்றால் அதுக்கு தனியாக 15 கோடி செலவாகுமாம்.

இதையும் படிங்க: பிக்பாஸ்: உன்கிட்டலாம் கேட்க முடியாது.. பிரதீப்பை பங்கம் பண்ணிய விஜய்… சைடில் கெடா வெட்டிய நிக்சன்..!

இதை செலவழிக்க தயார் என்றால் லியோ படம் 1000 கோடி என்பது சாத்தியமாகும். விஜயின் கடைசி படங்களின் வசூல் 400 கோடிக்கும் குறைவாகத்தான் வந்திருக்கும். அதனால் லியோ திரைப்படம் அதை விட கொஞ்சம் அதிகமாக 400 கோடிக்கும் மேல் வசூல் செய்யும்.

ஏன் ஜெயிலர் திரைப்படத்தை முறியடித்தால் கூட அது ஆச்சரியம்தான். அப்படியே ஜெயிலரின் வசூலை முறியடித்தாலும் அது சந்தோஷம்தான். இதில் ஜவான் திரைப்படம் 1000 கோடி சாத்தியம் என்பது அவர்கள் நார்த் பக்கம் செய்த ப்ரோமோஷன்தான் காரணம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறினார்.

Next Story