என்னையே வாடா கலாய்க்கிறீங்க? அந்த விஷயமே வேண்டாம்!... தலைவர்171 படத்தில் யூடர்ன் போட்ட ரஜினிகாந்த்!...

Rajinikanth: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் ரொம்பவே சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறார். வேட்டையன் முடிந்தவுடனே தலைவர் 171 படத்துக்குள் செல்லும் ரஜினி, லோகேஷுக்கு ஒரு கண்டிஷனை போட்டு விட்டே உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது. அதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: இது வேற லெலல் பார்ட்டியா இருக்கும் போலயே! நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட டைட்டில் வின்னர் அர்ச்சனா
பொதுவாக ரஜினி ஒரு படத்துக்கும் இன்னோரு படத்துக்குமே பெரிய கேப் எடுப்பார். ஆனால் பல வருடம் கழித்து ஜெயிலர் படம் கொடுத்த வெற்றி அவருக்கு புது எனர்ஜியை கொடுத்து இருக்கிறது. தொடர்ந்து வேட்டையன், தற்போது 171 என பிஸியாகி விட்டார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்துக்கு மல்டிஸ்டார் கேஸ்டிங் தான் முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது. ஷாக்கி ஷெராப், சுனில், மோகன்லால், சிவராஜ்குமார் என பலர் இருந்தது படத்தினை தூக்கிவிட்டதாகவும் பலர் கலாய்த்தனர். தற்போது வேட்டையன் படத்திலும் அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில் என நிறைய முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள்.
இதனால் ரஜினி தன்னை நம்பவில்லையோ என்ற சர்ச்சை உருவாகி இருப்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாராம். அதாவது தலைவர்171 படத்தில் எந்த முன்னணி நடிகரும் இருக்க வேண்டாம் எனவும் லோகேஷுக்கு கண்டிஷன் போட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக இப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்யாணம் பண்ணியாச்சு! அப்புறம் என்ன அதுதானே.. உற்சாகத்தில் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ
இப்படத்தின் வேலைகளில் ஏற்கனவே லோகேஷ் இறங்கிவிட்டதாகவும் வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தினை 3டியில் ரிலீஸ் செய்யவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறார்களாம். இப்படத்திற்கு அனிருத்தே இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.