Categories: Cinema News latest news

எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லாத படம்தான் ‘லியோ’! விஜய்க்கு எதிரா அலப்பறையைக் கூட்டும் பிரபலம்

Leo Trailer: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு  மாபெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வரும் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதற்குக் காரணம் ஒன்று விஜய். இன்னொருவர் இந்தப் படத்தின் இயக்குனரான லோகேஷ்கனகராஜ். விஜயும் லோகேஷும் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்திருக்கும் படம்தான் லியோ.

இதையும் படிங்க: சேப்டர் க்ளோஸ்! மாமியார் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகும் ஜெயம் ரவி – எப்பா அருள்மொழிவர்மா உனக்கா இப்படி?

விஜயை பொறுத்தவரைக்கும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒரு சாதாரண மனிதன் கூட ரசித்துப் பார்க்கும் நடிகர்தான் விஜய். எல்லாருடைய ரசிகர்களும் ஆர்வமாக பார்க்கும் படமாக விஜயின் திரைப்படம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் லியோ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இசை வெளியீட்டு விழா  நிறுத்தப்பட்டதன் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு நாளை ஒரு திருவிழாப் போலத்தான் இருக்கப் போகிறது.

இதையும் படிங்க: இடுப்பு மடிப்ப பாத்தே ஏங்கி போனோம்!.. கேப்பு உடாம போட்டு பொளக்கும் திவ்யா துரைசாமி!…

இதற்கு முன்பு வரை விஜயின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது தான் ரசிகர்கள் ஆரவாரத்தில் இருப்பார்கள். ஆனால் நாளை டிரெய்லர் வெளியீட்டிற்கே மிகப்பெரிய அலப்பறைகளை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் இந்தப் படத்தின் டிரெய்லரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மியிடம் கேட்டபோது எந்தவகையிலும் எதுக்குமே பிரயோஜனம் இல்லாத படம்தான் இந்த லியோ என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆறு மாசமாச்சி.. நாசமா போச்சி!.. விடாமுயற்சியால் விரக்தியான அஜித் ஃபேன்ஸ்!.. ஹேஷ்டேக்கை பாருங்க!..

மாஃபியா, கேங்ஸ்டர் என சமூகத்திற்கு முக்கியத்துவம் இல்லாத இந்த லியோ படத்தின் மீது தனக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டுமே அந்தப் படத்தை பார்க்கலாம் என்றும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஏதாவது சுவாரஸ்யமாக டிரெய்லரில் வைத்திருப்பார்கள் என்றும் கூறினார்.

Published by
Rohini