Cinema News
வாண்டடா போய் வம்ப விலைக்கு வாங்குறது.. அஜித்தை வச்சு பண்றதெல்லாம் ஒரு விஷப்பரீட்சை!
சமீப தினங்களாக ரஜினி ரசிகர்கள் எல்லாம் கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்கின்றனர். அந்தளவுக்கு படத்தின் டிரெய்லர் அவர்களை கூஸ் பம்பில் வைத்திருக்கிறது. அதுவும் முதல் சிங்கிளாக வெளியான காவாலா பாடலில் இருந்து படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
இன்னும் மூன்று நாள்களில் படம் திரைக்கு வரும் நிலையில் படம் என்ன செய்ய காத்திருக்கின்றது என்ற பயத்தில் தான் படத்தை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் இருக்கின்றனர். இதற்கு முன் ரஜின் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களில் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் நடித்தார் என மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : ஃபர்ஸ்ட் டைம் இவ்ளோ க்ளோஸாவா? ஜாலி பைக் ரைட்! நியூ லுக்கில் வைரலாகும் அஜித் புகைப்படம்..
ஆனால் இந்தப் படத்தில் நெல்சன் அதை மிகப் பிரம்மாதமாக சால்வ் பண்ணியிருக்கிறார். மேலும் படமுழுக்க ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு டிரெய்லர் ஆரம்பக்காட்சியில் இருந்து கடைசி வரைக்கும் ரசிகர்கள் கொண்டாடும் மாதிரியாக இருக்கின்றது என்று கூறினார்.
மேலும் இதுவரைக்கும் இப்படி ஒரு டிரெய்லரை பார்த்ததில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் சில கருத்துக்களையும் செய்யாறு பாலு கூறியிருந்தார். அதாவது பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களை வைத்து இந்த மாதிரியான படங்களைத்தான் எடுக்க முடியும் என்றும் சமூகக் கருத்துக்கள் கொண்ட படங்களை எடுக்க முடியாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க : அஜித்தின் ‘v’ செண்டிமெண்டுக்கு இவர்தான் காரணமா? விடாமுயற்சி மட்டும் ஏன் டேக் ஆஃப் ஆகல? ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்
துணிவு பட ரிலீஸுக்கு முன்பே எச்.வினோத் இதை பற்றி கூறியிருந்தாராம். அதாவது துணிவு படத்திற்கு முன்பு வினோத் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்கவேட்டை போன்ற சமூதாயத்தில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் அது சார்ந்த கருத்துக்களை கூறும் கதையாகத்தான் எடுத்திருந்தார்.
அதே போல் துணிவு படத்தையும் எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் அதற்கு பதிலளித்த வினோத் அஜித்தை வைத்து எல்லாம் சமுதாயம் சார்ந்த படங்களை எடுக்க முடியாது என்றும் அதையும் மீறி எடுத்தால் அது விஷப்பரீட்சை என்றும் கூறியிருந்தாராம்.
இதையும் படிங்க : மகிழ்திருமேனிக்கு அஜித் கொடுத்த ஷாக்!.. மறுபடியும் முதல்ல இருந்தா!. அட போங்கடா!..
அதே கான்செப்ட்டில்தான் ஜெய்லர் திரைப்படமும் தயாராகியிருக்கிறது. அங்கங்கு ஹீரோவுக்கு தேவையான மெட்டீரியலை தெளித்துக் கொண்டே இருந்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்று கூறினார்.