Cinema News
நான் எப்படிப்பட்டவன்? சிக்குவேனா? வடிவேலுவுக்கும் பயில்வான் ரெங்கநாதனுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கா?
Actor Vadivelu:தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய காமெடியான வசனத்தாலும் நடிப்பாலும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவர் வைகை புயல் வடிவேலு. இவர் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப கால கதை என்ன என்பது அனைவருக்குமே தெரியும். எப்படி நுழைந்தார்? எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் ஆரம்ப காலத்தில் நடித்தார்.
இன்று அவருடைய வளர்ச்சி எப்பேர்ப்பட்டது என அனைவரும் அறிந்த ஒன்றே .ராஜ்கிரண் மூலமாக முதன் முதலில் ஒரு முழு நகைச்சுவை நடிகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் வடிவேலு. என் ராசாவின் மனசிலே படம் தான் அவருடைய காமெடியை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது. அதற்கு முன் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் சின்ன கதாபாத்திரத்தில் மட்டுமே தோன்றியிருப்பார் வடிவேலு.
இதையும் படிங்க : கமலுக்கும் இருக்கும் பெருந்தன்மை ரஜினிக்கு இல்லை!.. இந்த விஷயத்துல கிரேட் உலக நாயகன்தான்!..
ஆனால் அவரை ஒரு முழு நகைச்சுவை நடிகராக மாற்றிய படம் என் ராசாவின் மனசிலே திரைப்படம் தான். அந்த படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்து இன்று நகைச்சுவையில் ஒரு பெரிய கோட்டையை கட்டி வைத்திருக்கிறார் வடிவேலு. ஆனால் சமீப காலமாக வடிவேலுவை பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன .
அதையெல்லாம் பற்றி அவர் எப்பவுமே கவலைப்பட்டதே இல்லை. அவருடன் நடித்த சக நடிகர்களை கவனிப்பதில்லை .அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில்லை. யாரையும் கண்டு கொள்வதில்லை என்ற ஒரு விமர்சனம் வடிவேலு மீது சமீப காலமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார் .
இதையும் படிங்க: ஹாலிவுட் இயக்குநர்களுடன் ஒன் டு ஒன் மோத ரெடியான ஷங்கர்!.. அடுத்தடுத்து அவரிடம் இருக்கும் 3 சரக்கு?
அதாவது வடிவேலுவிடம் சான்ஸ் கேட்டு ஏராளமான நடிகர்கள் போய் வரிசையில் நிற்பார்கள். நான் அப்படி செய்வதில்லை. அதனால் தான் வடிவேலுவுக்கு இன்று வரை என் மீது கோபம் இருக்கிறது. நான் வாய்ப்பு தேடி பாக்கியராஜ் தவிர வேறு யாரு வீட்டுக்கும் சென்றதில்லை. என்னுடன் பணியாற்றிய போலீஸ்காரர்களும் சரி பத்திரிகையாளர்களும் சரி இப்போது அனைவரும் இறந்து விட்டார்கள். என்னை மாதிரி யாரும் உற்சாகமாக இல்லை .அதற்கு காரணம் உண்மை உழைப்பு உயர்வு என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.