தமிழில் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படமும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வாரிசு திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியான சமயத்தில் அதில் வெளியான தீ தளபதி பாடல் வெகுவான வரவேற்பை பெற்றது. ஏனெனில் ப்ரோமோவுக்காகவே தனி பாடலாக தீ தளபதி பாடலை இயக்கியிருந்தனர். முதலில் இந்த பாடலை இயக்குவதற்கு யோசனையே இல்லை.

நடிகர் சிம்பு அந்த பாடலை பாடுவார் என்று மட்டும் முடிவாகியிருந்தது. நேரில் வந்து அந்த பாடலை சிம்பு பாடி கொடுத்தார். அதன் பிறகுதான் அதை வீடியோ பாடலாக இயக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. சிம்புவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
உடனே படமாக்கவேண்டும் என்பதால் எந்த ஒரு செட்டும் போடவில்லை. எனவே அதிக லைட் வைத்து பாடலை எடுக்க முடியாது என முடிவு செய்தனர். அதனால் இருட்டில் நெருப்பை எறிய வைத்து பாடலை படம் பிடிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு கார், மைக் என பல பொருட்களை எறிய வைத்து படம் பிடித்தனர்.
படப்பிடிப்பில் நடந்த விபத்து:
டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் அவரது கையில் நெருப்பை எறிய வைத்து அந்த பாடலில் நடித்திருப்பார். தீ தளபதி பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்கும் அவரது கையை எறிய வைத்துக்கொண்டு நடிக்க ஆசைப்பட்டார். சாண்டி எவ்வளவோ எச்சரித்தும் கேட்காமல் கையில் நெருப்பை பற்ற வைத்துக்கொண்டு நடித்தார்.

ஆனால் அந்த நெருப்பு எப்படி கையில் பட்டு கையில் காயத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்காக மிகவும் வருத்தப்பட்டுள்ளார் சாண்டி. ஒரு பேட்டியில் சாண்டி இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.





