More
Categories: Cinema History Cinema News latest news

எம்.ஜி.ஆரையே அவமானப்படுத்தி மிரட்டி வேலை வாங்கிய டெரர் இயக்குனர்… அது யார் தெரியுமா?…

நாடகங்களில் நடித்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே அவமானங்களை சந்தித்தவர். பசி, பட்டினியை அனுபவித்தவர். எம்.ஜி.ஆர் என்றால் நடிகர், முதமைச்சர், எல்லோருக்கும் அள்ளி கொடுத்தார் என்பது மட்டும்தான் பலருக்கும் தெரியும். ஆனால், எம்.ஜி.ஆர் கடந்து வந்த பாதைகளில் முட்கள் ஏராளம்.

சினிமாவில் எம்.ஜி.ஆர் சுலபமாக ஹீரோ ஆகிவிடவில்லை. 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் என்றால் நம்பமுடிகிறதா?.. ஆனால், அதுதான் உண்மை. சில நடிகைகள் அவருடன் நடிக்கவே மறுத்தனர். எம்.ஜி.ஆருக்கு முதல்முதல் ஹீரோ வாய்ப்பு கிடைத்து ஒரு நடிகையுடன் நடித்தபோது, அந்த நடிகையின் கணவர் ‘ஒரு துணை நடிகரின் மடியில் என் மனைவி படுப்பதா?’ என சொல்லி நடிகையை படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்து சென்ற கதையெல்லாம் நடந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: எனக்கு பாட்டெழுதாம வெளிய போக முடியாது!. கண்ணதாசனை அறையில் பூட்டிய எம்.ஜி.ஆர்….

இத்தனை அவமானங்களை சந்தித்துதான் எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோவாக மாறினார். அப்போது எம்.ஜி.ஆர் சொல்வதே சட்டம். அவர் என்ன சொல்கிறாரோ அதுவே இறுதி முடிவாகவும் மாறியது. எம்.ஜி.ஆர் சொல்வதை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கேட்டுக்கொள்வார்கள். அதுதான் அவரின் வெற்றியாக இருந்தது.

அதேசமயம், எம்.ஜி.ஆரை அதட்டி, மிரட்டி வேலை வாங்கிய ஒரு டெரர் இயக்குனர் பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் மிகவும் பழமையான சினிமா நிறுவனம். இதன் நிறுவனர் டி.ஆர் சுந்தரம். இவர் ஒரு இயக்குனரும் கூட. இவர் இயக்கிய திரைப்படம்தான் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. இந்த படம் 1956ம் வருடம் வெளியானது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…

இந்த படத்தில் எம்.ஜி.ஆர், பானுமதி. பி.எஸ்.வீரப்பா, சக்கரபாணி என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்கிற வசனம் வரும். அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தார். பகுத்தறிவு சிந்தனையால் அந்த வசனத்தை ‘அம்மாவின் மீது ஆணையாக’ என பேசினார். உடனே கட் சொன்ன சுந்தரம் ‘அலிபாபாவுக்கு அல்லாதான் எல்லாம்.. உன் இஷ்டத்துக்கு வசனத்தை மாத்தி பேசக்கூடாது’ என சொல்ல அவமானப்பட்ட எம்.ஜி.ஆர் அவர் சொன்னபடியே அந்த வசனத்தை பேசி நடித்துள்ளார்.

டி.ஆர் சுந்தரம் மிகவும் கண்டிப்பானவர். அவர் முன் யாரும் அமர்ந்து கூட பேசமாட்டார்கள். நடிகர்களை அடக்கி வைத்து வேலை வாங்கிய இயக்குனர் அவர். அதே படத்தில் எடுத்த காட்சிகள் ரஷ் போட்டு பார்த்துக்கொண்டிருந்த போது எம்.ஜி.ஆரை தனது நண்பருடன் அதை பார்க்க சென்றிருக்கிறார்.

அப்போது கோபப்பட்ட சுந்தரம் ‘நீ மட்டும் வா. உன்னுடன் யாரும் வருவதற்கு அனுமதில்லை’ என சொல்லிவிட்டார். இதுவும் எம்.ஜி.ஆருக்கு அவமானமாகி போனது. படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..

Published by
சிவா

Recent Posts

  • Bigg Boss Tamil 8
  • Biggboss
  • BiggBoss Tamil
  • Biggboss Tamil 7
  • Featured
  • Flashback
  • latest news
  • OTT
  • Review

இதையெல்லாம் கேட்க முடியல!.. யுடியூப் ரிவ்யூக்கு மட்டும் தடையா?!… பொங்கும் புளூசட்ட மாறன்!…

முன்பெல்லாம் சினிமா…

45 minutes ago