More
Categories: Cinema News latest news

குறைவான பட்ஜெட்டில் பெத்த லாபம்!. சன் பிக்சர்ஸ் கல்லா கட்டிய 3 திரைப்படங்கள்…

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல வருடங்களாகவே திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளது. எந்திரன் படம் முதலில் ஐயங்கரன் பி்லிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. ஆனால், அந்நிறுவனம் பாதியில் அப்படத்திலிருந்து வெளியேற ரஜினியே நேரில் போய் ‘இந்த படத்தை நீங்கள் தயாரியுங்கள்’ என கேட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம்தான். இதுதான் அந்நிறுவனம் தயாரித்த முதல் படமாகும்.

ஆனால், 2008ம் வருடத்திலிருந்தே சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படங்களை வாங்கி வினியோகம் செய்து வருகிறது. காதலில் விழுந்தேன், அயன், வேட்டைக்காரன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வினியோகஸ்தராக இருந்துள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கலாநிதி மாறன் கொடுத்த கவரில் இருந்தது இத்தனை கோடியா!.. அடேங்கப்பா தலையே சுத்துது!…

விஜயை வைத்து சர்கார், பீஸ்ட் ஆகிய படங்களையும், ரஜினியை வைத்து எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளது. அண்ணாத்த படத்திற்கு பின் ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம்தான் ஜெயிலர்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, தமன்னா, வினாயக் வர்மா, மோகன்லால் மற்றும் சிவ்ராஜ்குமார் என பலரும் நடித்து வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது ஜெயிலர் படம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் வசூலை வாரிகுவித்து ரூ.700 கோடி வசூலை தாண்டிவிட்டது.

இதையும் படிங்க: தலைவர் 171!. சன் பிக்சர்ஸ் மீது செம கடுப்பில் லோகேஷ் கனகராஜ்!.. இப்படி பண்ணலாமா?!..

மொத்தத்தில் இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. இதில், ரஜினிக்கு ரூ.80 கோடி சம்பளமாகவும் ரூ.30 கோடி அன்பளிப்பாகவும் கொடுக்கப்பட்டது. நெல்சனுக்கு ரூ.20 கோடி சம்பளமாகவும் ரூ.5 கோடி அன்பளிப்பாகவும் கொடுக்கப்பட்டது. மேலும், ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த காரையும் கலாநிதி மாறன் அன்பளிப்பாக கொடுத்தார்.

அதேநேரம், குறைவான பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் அதிக லாபத்தை பார்த்த 3 படங்கள் பற்றி இங்கே பார்ப்போம். 3வது இடத்தில் இருப்பது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம். ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.70 கோடி வசூல் செய்தது. அதேபோல், தனுஷ் நடிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.110 கோடி வரை வசூல் செய்தது. அதேபோல், முதலிடத்தில் இருப்பது ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா 3’ படம். இந்த படமும் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.130 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லியோ ஆடியோ ரிலீஸில் இவங்களுக்கு அழைப்பு கிடையாது… ஏ.ஆர்.ரஹ்மானால் விஜயிற்கு வந்த சிக்கல்…

Published by
சிவா

Recent Posts