வில்லனான இயக்குனர் மகேந்திரன்... தெறி படத்துக்கு ஓகே சொன்ன சுவாரஸ்ய சம்பவம்..

by Akhilan |
மகேந்திரன்
X

மகேந்திரன்

விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. இப்படத்தில் வில்லனாக முதன்முறையாக நடிப்பிற்கு வந்திருப்பார் இயக்குனர் மகேந்திரன். இந்த மேஜிக் எப்படி நடந்தது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

theri

theri

அட்லீ இயக்கத்தில் விஜயின் முதல் படம் தெறி. இப்படத்தில் விஜய் ஒரு ஐபிஎஸ் ஆபிசராக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அவர்களுடன் நைனிகா, ராதிகா, எமி ஜாக்சன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் நடித்திருந்தனர். இப்படத்தில் முதன்முறையாக நடிகராக இயக்குனர் மகேந்திரன் நடித்தார். அமைதியான வில்லன் என்றாலும் அதிரடியை காட்டி ரசிகர்களிடம் இடம் பிடித்தார்.

இப்படத்தின் கதையை எழுதும்போது படத்தில் வில்லனாக மகேந்திரன் தான் நடிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் அட்லீ உறுதியாக இருந்து இருக்கிறார். இதை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜயிடம் கூறிய போது அவர்களுக்கும் இது சரியாக வரும் என்றே தோணியதாம். தொடர்ந்து, மகேந்திரனிடம் படத்தினை பற்றி கூற தரணியே சென்றாராம்.

மகேந்திரன்

மகேந்திரன்

இதற்கு முன்னரே வருவதை போன் பண்ணி கூறிவிட மகேந்திரனுக்கோ எதுக்கு வருகிறார் என யோசனையாக இருந்ததாம். இருந்தும் அவர் என்ன கேட்டாலும் ஓகே சொல்லி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து இருக்கிறார். உங்கள் படங்களில் உலகத்தை காட்டினீர்கள். உங்களை உலகிற்கு காட்ட ஆசைப்படுகிறோம் என தரணி கேட்டாராம். ஏற்கனவே முடிவு செய்தபடியே ஓகே சொல்லிவிட்டாராம். படத்தில் என்ன வில்லத்தனம் காட்டி இருப்பாருல!

Next Story