எப்பேர்ப்பட்ட படத்தை எடுத்த இயக்குனர் இவர்.! இந்த போட்டோவ யாருமே எதிர்பார்கல.!
தமிழ் சினிமாவில் சிறந்த பத்து படங்களை எடுத்தால் இந்த படத்திற்கு ஓர் முக்கிய இடம் உண்டு. இந்திய சினிமாவில் இந்த படத்தை பார்த்து இப்படம் கதை சொல்லிய விதத்தை பார்த்து பலர் முன்னுதாரணமாக கொண்டு தங்கள் படத்தை ஏன் படம் இயக்குவதற்கே நாங்கள் அப்படம் பார்த்து தான் வந்தோம் எனும் சொல்லும் அளவிற்கு இருந்த படங்களில் ஒன்று தேவர் மகன்.
இப்படத்திற்கு பல சம்பவங்கள் உண்டு. கதையாக பார்த்தால் மிக பெரிய கதை. அதனை இரண்டரை மணி நேரத்திற்கு சுருக்கி, ஒரு பிரேம் கூட வேஸ்ட் செய்யமால் அழகாக கதை சொல்லி இருப்பார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை கமல்ஹாசன் எழுதி இருந்தார். பிரபல மலையாள பரதன் அற்புதமாக இயக்கி இருந்தார்.
இதையும் படியுங்களேன் - 15 வருடம் கழித்தும் நன்றி மறக்காத கார்த்தி.! அவரே எழுதிய நெகிழ்ச்சி பதிவு.!
இப்படத்தின் திரைக்கதையை எழுத இயக்குனர் பரதன் கமலுக்கு 7 நாள் அவகாசம் கொடுத்ததாக கூறப்பட்டது. அதன் காரணமாக, கமல் கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் முதன்முறையாக இதன் திரைக்கதையை எழுதி முடிந்ததாக கூறப்பட்டது. 7 நாளில் இப்படத்தின் திரைக்கதையை சிறப்பாக எழுதி முடித்தார் கமல்.
அந்த கதைக்களத்தின் அழகு மாறாமல் சிறப்பாக இயக்கி முடித்தார் இயக்குனர் பரதன். இயக்குனர் பரதன். அதன் பிறகு 1998ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் இறந்த பின்பும் தற்போது வரை அவரது படங்கள் சினிமா இருக்கும் வரை வாழ்ந்து வரும். அவரும் அவரது மனைவி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளனர். பலர் அதனை பகிர்ந்து தேவர் மகன் நினைவுகளை குறிப்பிட்டு வருகின்றனர்.