தலை தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்!.. முதல் ஆளா லிஸ்ட்டில் சேர்ந்த அமலாபால்!..
Thalai Deepavali Celebrities: தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகைதான். ஒரு பக்கம் வீட்டில் பலகாரம், புத்தாடைகள் வாங்குவது, பட்டாசுகள் வெடிப்பது என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு கோலாகலமான பண்டிகையாகத்தான் தீபாவளி இன்று வரை பார்க்கப்படுகிறது. இதில் தலை தீபாவளி என்ற சம்பிராதாயம் இருக்கிறது.
இந்த தலை தீபாவளியை சினிமா பிரபலங்கள் யாரெல்லாம் வரவேற்றுக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படிங்க: ‘அடங்கொப்பன் தாமிரபரணில தலைமுழுக’ எத்தனை பேர் ரசிச்சிருக்கீங்க? எத வச்சு பேசுனார் தெரியுமா ஆனந்தராஜ்?
கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்: கடல் படத்தின் மூலம் அறிமுகமான கௌதம் கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இருந்தாலும் தன் அப்பா அளவுக்கு சரியான வரவேற்பை அவரால் இன்றளவும் பெற முடியவில்லை. தேவராட்டம் என்ற படத்தில் ஜோடியாக நடித்த மஞ்சிமாவை காதலித்த கௌதம் கடந்த வருடம் நவம்பரில் மஞ்சிமாவை கரம் பிடித்தார். இந்த தீபாவளி இவர்களுக்கு தலை தீபாவளியாக அமைகிறது.
கவின் - மோனிகா: சின்னத்திரையில் ஜொலித்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அதன் மூலம் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவரின் நடிப்பில் வெளியான டாடா பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை இதே வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கரம்பிடித்தார். இவர்களுக்கும் இதுதான் தலை தீபாவளி.
இதையும் படிங்க: ‘ஜெயிலர்’லாம் தூசு! அந்தப் படம் மட்டும் வெளிவந்திருந்தால் நெல்சனின் ரேஞ்சே வேற – இப்ப கூட வாய்ப்பிருக்கு
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்: அருண் பாண்டியன் மகள்தான் கீர்த்தி பாண்டியன். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் நடிகர் அசோக் செல்வனை மணந்தார் கீர்த்தி. இவர்களின் திருமணம் மிகவும் எளிய முறையில் தன் சொந்த கிராமத்தில் நடந்தது. இப்போது ஹனிமூனுக்காக இருவரும் வெளி நாட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் இதுதான் தலை தீபாவளி.
அமலா பால் - ஜெகத் தேசாய்: கடந்த வாரம் தான் அமலா பால் தன் நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் சமீபத்தில் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடிய போது அந்த நேரத்தில்தான் ஜெகத் தேசாய் அமலாபாலுக்கு ப்ரோபோஸ் செய்தார். அதன் பிறகு கடந்த வாரம்தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: நான் எழுதிய கதையை இதனால் தான் ஷங்கருக்கு கொடுத்தேன்… டாப் இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!