More
Categories: Cinema History Cinema News latest news

பாபா படம் கண்டிப்பாக ஓடாது… படப்பிடிப்பு சமயத்திலேயே கணித்த முக்கிய பிரபலங்கள்…

பாபா திரைப்படம் கண்டிப்பாக ஓடாது என படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே முக்கிய பிரபலங்கள் இருவர் கணித்து இருந்ததாக தகவல்கள் கசிந்துள்ளது.

2002ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் தான் பாபா. ரஜினிகாந்த் தனது லோட்டஸ் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் எழுதி தயாரித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார், சோட்டா கே. நாயுடு ஒளிப்பதிவு செய்தார். ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இப்படத்தில் நம்பியார், சுஜாதா, கவுண்டமணி, கருணாஸ், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான். படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

Advertising
Advertising

Goundamani

இமயமலையில் இருந்து வந்த ஒரு பெரிய துறவியின் மறு அவதாரமான பாபா மற்றும் கடவுளை நம்பாத இளைஞனின் கதை. இதில் அவருக்கு 7 வரம் கிடைக்கும். அதை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதும் அதே நேரத்தில் வில்லன்களுடன் சண்டையிடுவதும் தான் படத்தின் கதை.

இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே எல்லாரும் பாபா என்றே கத்திக்கொண்டு இருந்தனர். தினம் ஒரு தகவல் போல பாபாவை பற்றிய பேச்சே நிலவியது. ஒவ்வொரு பத்திரிக்கையும் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை கொடுக்க அல்லாடியது.

இதையும் படிங்க: பாபா படத்தின் சுவாரஸ்ய தகவலை கொடுக்க போட்டி போட்ட பத்திரிக்கைகள்… என்னென்னலாம் பண்ணிருக்காங்க தெரியுமா?

இதை கவனித்த கவுண்டமணி படம் கண்டிப்பாக ஓடாது. ஓவர் எதிர்பார்ப்புகள் இருக்கு இதனால் கண்டிப்பாக இந்த படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு இருக்காது எனக் கூறிவிட்டாராம். அடுத்து இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு நடன இயக்குனரை ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்தார்.

Raghava lawrence

மாயா மாயா பாடலுக்கு நடனம் இயற்றியவர் ராகவா லாரன்ஸ். அவர் பாடலுக்கு இயக்கும் போது படத்தினை பார்த்து விட்டால் அதில் இருந்து எதும் பாடலுக்கு பயன்படுத்திக் கொள்வேன் எனக் கேட்டு இருக்கிறார். இதனால் அவருக்கு படத்தினை படக்குழு போட்டு காண்பித்து இருக்கின்றனர்.

அதை பார்த்த ராகவா லாரன்ஸ் ரஜினியிடமே இந்த படம் ஓடும் என எனக்கு தோணவில்லை. எதுவோ குறைவது போல இருக்கு. பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு நடனம் இயற்றி கொடுத்து விட்டு போயிருக்கிறார். கடைசியில் இருவரும் சொன்னது போல படம் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan