Cinema History
ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது இப்படித்தான்!.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!..
ரஜினி, கமல், விஜய், அஜீத் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் தினேஷ்குமார். ஆடுகளம் படத்தில் சிறந்த நடன இயக்குனராக தேசிய விருது பெற்றவர். இவர் நடிகராகவும் இருக்கிறார். தனது சினிமா உலக அனுபவங்களை சித்ரா லெட்சுமணனிடம் ரத்தின சுருக்கமாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆல்தோட்ட பூபதி பாட்டுத்தான் இவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது. பிரபுதேவா தான் இவரது குருநாதர். அதே நேரம் அவருக்கே இவர் கோரியோகிராபராக இருந்துள்ளார். 1500 நடனக்கலைஞர்களுடன் லியோ படத்தில் பாடலுக்கு கோரியோகிராபராக இருந்தேன்.
இதையும் படிங்க… முதல்வராகி முதன் முதலாக சொந்த ஊருக்கு போன எம்.ஜி.ஆர்!.. மனம் கலங்கி நின்ற நெகிழ்ச்சி தருணம்!..
ஆரம்பத்தில் டான்சர்ஸ் யூனியன்ல மெம்பராக இருந்தவர் தான் மன்சூர் அலிகான். இவர் நடனத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தார். சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு செமயாக ஆட்டம் போட்டு இருப்பார். நடிக்க வந்ததும் டான்ஸில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்.
நடனத்தில் தீவிர ரசிகராக இருந்த கமல்ஹாசனை நான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின்போது தான் சந்தித்தேன். என்னைப் பார்த்து கைகொடுத்து விட்டுச் சென்றார். அப்புறம் பிரபுவைப் பார்த்து பிரபு அவரை விடாதீங்க பென்ட்ட கழற்றுங்கன்னு சொன்னார். சிம்ரனைப் போல யாரும் இப்போது டான்ஸ் ஆடவில்லை. ரஜினிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தால் அவர் உடனே பிக் அப் பண்ணிக்கிடுவார். அப்புறம் அந்த டான்ஸ் வரும்போது அவரோட ஸ்டைலும் சேர்ந்து வரும்.
இதையும் படிங்க… உங்களுக்கு எப்படி இது தெரியும்?!. அஜித்துக்கு வாலி எழுதிய வரிகள்!. வாயடைத்து போன இயக்குனர்…
ஆடுகளம் படத்தில் ஒரு நார்மலான பையன், அழகான பொண்ணைக் காதலிக்கும்போது அவனுக்குள்ள இருக்குற சந்தோஷம் எப்படி இருக்குமோ அதுதான் அந்தப் பாட்டு. ஒத்த சொல்லால என்ற அந்தப் பாட்டைப் பார்க்கும்போது ஸ்டெப்ஸ் எல்லாம் கம்போஸ்ட்டா இருக்கக்கூடாது என்ற விதிப்படி பாடலை அமைச்சிருந்தோம். அது ரொம்பவே வெரைட்டியா இருந்தது. அதனால தான் அந்தப் பாடலுக்கு தேசிய விருது கிடைச்சது என்கிறார்.
2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் ஆடுகளம். தனுஷ், டாப்சியின் துள்ளலான நடிப்பும், பாடலும் படத்திற்கு கூடுதல் பிளஸ். கதையும், சேவல் சண்டையும், கிராமிய மணமும் கமழ வெளிவந்து பலதரப்பு ரசிகர்களையும் படம் ஈர்த்தது.