Connect with us
எம்.ஜி.ஆர்

Cinema History

எம்.ஜி.ஆர். பார்த்த கடைசி திரைப்படம்… என்ன படம், யார் நடித்தது தெரியுமா?

தமிழ் திரையுலகின் முடிசுடா மன்னன் எம்.ஜி.ஆர் விரும்பி பார்த்த கடைசி தமிழ் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் இமயம் பாரதிராஜா மிகப்பெரிய உட்சத்தில் இருந்த காலம் அது. சமூகத்தில் பேசப்படாத கதைகளை தொடர்ச்சியாக திரைப்படமாக சொல்லி வந்தார். அப்படி ஒரு படம் தான் வேதம் புதிது. இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா நடித்திருந்தனர்.

vedham puthithu

படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடிந்து தணிக்கை கொண்டு செல்லப்பட்டது. மத்திய தணிக்கை துறை எந்தவித கட்டும் படத்தில் சொல்லவில்லை. ஆனால் படத்தினை ரிலீஸ் செய்ய முடியாது எனக் கூறிவிட்டனர். இது அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் காதுக்கு சென்று இருக்கிறது. பாரதிராஜாவினை தொலைப்பேசியில் அழைத்த எம்.ஜி.ஆர் என்னப்பா படத்தில் பிரச்சனையாமே எனக் கேட்டு இருக்கிறார்.

எம்.ஜி.ஆர்

mgr – bharathiraja

தொடர்ந்து எனக்கு அந்த படத்தினை பார்க்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறினாராம். ஏ.வி.எம் தியேட்டரில் படக்குழுவுடன் படத்தினை பார்த்தாராம் எம்.ஜி.ஆர். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக உடனே ரிலீஸ் தேதியை அறிவித்து விடு. படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என பாரதிராஜாவிடம் கூறி சென்றாராம். ஆனால் அந்த படத்தின் ரிலீஸை காணாமல் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். அவர் இறந்து மூன்று நாட்கள் கழித்து டிசம்பர் 27 1987ல் படம் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top