சோலி முடிஞ்சிது… மொத்தமாக கசிந்த கோட் திரைப்படத்தின் கதை… அப்போ அது இல்லையா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக இருக்கும் கோட் படத்தின் மொத்த கதையும் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. இதனால் ரசிகர்களும் செம அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
முதலில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ஒரு டைம் டிராவல் படம் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி அப்படி எதுவுமே படத்தில் இல்லையாம். இது சாதாரண கமர்ஷியல் படமாகவே உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். அப்பா மற்றும் மகன் என இரு விஜய்.
இதையும் படிங்க: பிடிக்காத படத்தை ராவுத்தருக்காக ஓகே செய்த கேப்டன்… தியேட்டரை அசரடித்த வசூல் வேட்டை!…
அப்பா விஜயிற்கு சினேகாவும், மகன் விஜயிற்கு மீனாட்சியும் ஜோடி. பாரதிராஜா, பாக்கியராஜ், கமல் ஆகியோர் கூட்டணியில் ரிலீஸான திரைப்படம் ஒரு கைதியின் டைரி. அப்படத்தின் புதிய வெர்சன் திரைப்படம் தான் கோட் படமாகி இருக்கிறது.
ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் அப்பா கமல், வில்லன்களை போட்டுத் தள்ளிக்கொண்டிருப்பார். காவல்துறையில் அதிகாரியாக இருக்கும் மற்றொரு கமல் தந்தையை சுற்றிவளைத்து பிடிக்க நினைப்பார். அதுப்போலவே, கோட்டிலும் காவல்துறையில் அப்பா விஜய் சீக்ரெட் ஏஜென்டாக நடித்துள்ளாராம்.
அப்பா விஜய் தன்னுடைய முக்கிய டீம்களுடன் இணைந்து தமிழகத்தில் இருக்கும் தீவிரவாதக் கும்பலை தேடிக்கொண்டு இருக்கிறார். ஆனால், அந்தத் கும்பலில் வளர்க்கப்பட்டு தற்போது அப்பாவுக்கு வில்லனாக இருக்கிறார் மகன் விஜய். அப்பா விஜயோ தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக நினைக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினி நாயகியிடம் இருக்கும் அஜித்தின் அந்த விஷயம்… அம்மணி கெத்துதான்!