வெளியேறிய அரண்மனை 4... பொங்கலுக்கு வெளியாகும் 3 படங்கள்!.. இதுதான் ஃபைனல் லிஸ்ட்!..

திரையுலகை பொறுத்தவை முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, வினாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு போன்ற நாட்களில் பெரிய நடிகர்கள் தங்களின் படங்கள் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள். மேலும், தொடர்விடுமுறை கிடைக்கும்போது கல்லா கட்டிவிடலாம் என்பதுதான் தயாரிப்பாளர்களும் கணக்கும் கூட.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதலே அவர்களின் பல திரைப்படங்கள் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. அதன்பின் ரஜினி, கமல் படங்கள் அப்படி வெளியானது. 80களில் மோகன் படங்களும் அவர்களுடன் போட்டி போட்டது. 90களில் விஜயகாந்தின் படங்க ரஜினி, கமல் படங்களோ போட்டி போட்டு பண்டிகை நாட்களில் வெளியாகும்.

vikram
ஆனால், படிப்படியாக அது குறைந்துவிட்டது. இப்போது முன்னணி பெரிய நடிகர்கள் எனில் ரஜினி, விஜய், அஜித் மட்டுமே. விக்ரம் பட ஹிட்டுக்கு பின் கமலும் இதில் இணைந்துள்ளார். அடுத்து சூர்யா, தனுஷ், கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இருக்கிறார்கள்.
வருகிற பொங்கலுக்கு சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4, சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷுன் கேப்டன் மில்லர், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம், விக்ரம் நடித்த தங்கலான், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா, கமலின் இந்தியன் 2 என பல திரைப்படங்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் பல படங்களின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.
இந்தியன் 2, கங்குவா, தங்கலான் ஆகிய படங்களின் படப்பிடிப்பே முடியவில்லை. எனவே, அந்த படங்கள் பொங்கல் ரேஸிலிருந்து வெளியேறியது. இப்போது அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிபோய்விட்டது. எனவே, அயலான், கேப்டன் மில்லர் மற்றும் லால் சலாம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
தங்கலான் மார்ச் மாதம் 29ம் தேதியும், கங்குவா ஏப்ரல் 11ம் தேதியும், இந்தியன் 2 ஏப்ரல் 12ம் தேதியும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கு இடையில் அரண்மனை 4 படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வேட்டையன், விடாமுயற்சி, தளபதி 68 ஆகிய படங்கள் அடுத்த வருட கோடை விடுமுறையை குறி வைத்துள்ளது.
இதையும் படிங்க: 6 நாள் நடிச்சதுக்கு இத்தனை கோடி சம்பளமா?!.. வேற லெவலில் இறங்கி அடிக்கும் உலக நாயகன்..