நடிப்புக்கு வடிவேலு டிரெய்னிங் எடுத்த இடம் இதுதானாம்!.. அங்கதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டாராம்!...

by சிவா |
vadivelu
X

தமிழ் சினிமாவில் வைகைப்புயலாக நுழைந்தவர் வடிவேலு. மதுரையை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர். இவருக்கு நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண் அடைக்கலம் கொடுத்தார். அதோடு, அவர் தயாரித்து, நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுவை நடிக்க வைத்தார்.

அதோடு, முதல் படத்திலேயே அவருக்கு ஒரு பாடலையும் கொடுத்தார். அதன்பின் வடிவேலு சின்னக் கவுண்டர், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். மெல்ல மெல்ல உயர்ந்து ஒருகட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறினார். எந்த நடிகரிடம் இல்லாத மதுரை பாஷை மற்றும் தனித்துவமான உடல்மொழி மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: வடிவேலு செஞ்ச காரியத்துக்கு அரிவாளை தூக்கி வெட்டப் போன நடிகர்! இந்தளவுக்கு நடந்திருக்கா?

வடிவேலுவிடம் இருக்கும் உடல்மொழி இதுவரை எந்த காமெடி நடிகர்களிடமும் ரசிகர்கள் பார்த்தது இல்லை. அதேபோல், அவர் செய்த அலப்பறைகளும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இம்சை அரசன் இரண்டம் புலிகேசி, இந்திரலோகத்தில் அழகப்பன், எலி, தெனாலி ராமன், நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

vadivelu

மாமன்னன் படத்தில் உதயநிதியின் அப்பாவாக குணச்சித்திர வேடத்தில் அசத்தி இருந்தார். இதுவரை வடிவேலுவை யாரும் அப்படி பார்த்தது இல்லை. எனவே, அதுபோன்ற பல கதாபாத்திரங்கள் இப்போது அவரை தேடி வருகிறது. ஆனால், அவரோ மீண்டும் காமெடியில் விட்ட இடத்தை பிடிக்க பிரபுதேவா போன்றவர்களோடு கூட்டணி போட்டு நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: வடிவேலுவிடம் பேக்கரி கதையை கேட்கும் நபராக நடித்தவர் யார் தெரியுமா?!.. ஒரு ஆச்சர்ய தகவல்!

இந்நிலையில், ஒருமுறை ஊடகம் ஒன்றில் பேசிய வடிவேலு ‘என்னிடம் நீங்கள் பார்க்கும் நடிப்பும், உடல் மொழியும், அலப்பறையும் மதுரை மண்ணில் நான் கற்றுக்கொண்டதுதான். அங்கு பலரும் அப்படித்தான் இருப்பார்கள். மதுரையில் உள்ள வீதிகளில்தான் நான் நடிப்பை கற்றுகொண்டேன். அங்கு கூலித்தொழிலாளி, ஆட்டோ ஓட்டுபவர் என பல வகையான வேலை செய்பவர்களிடம் பழகி இருக்கிறேன். மதுரை தெருக்களில் நான் பார்த்தவற்றைத்தான் சினிமாவில் பிரதிபலித்தேன்.

போடா போடா புண்ணாக்கு பாட்டு முதல் இம்சை அரசன் வரை நான் உயர்ந்ததற்கு காரணம் நான் வசித்த மதுரைதான்’ என வடிவேலு சொல்லி இருக்கிறார். திரைத்துறையில் மதுரையை சேர்ந்த பலர் இருந்தாலும் ஹீரோவாக விஜயகாந்தும், நகைச்சுவை நடிகராக வடிவேலுவும் உச்சம் தொட்டனர் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: வடிவேலு மன்னிப்பு கேட்கனும்! குற்ற உணர்வோடவே வாழ வேண்டியதுதான்.. நச்சுனு சொன்ன நடிகர்

Next Story