பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸ் இப்படி தான் இருக்கும்... உடைந்த சீக்ரெட்

by Akhilan |
பொன்னியின் செல்வன்
X

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தின் கிளைமாக்ஸ் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க திட்டமிட்டு வந்தனர். பல இயக்குனர்கள் அதற்கு பூஜை வரை போட்டுக்கூட படப்பிடிப்பை துவங்க இயலவில்லை. இதற்கிடையில், இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை வெளியீட்டிற்கே கொண்டு வந்து விட்டார். இவருக்கும் இது உடனே நடைபெற இல்லை. 10 வருடமாக போராடி தற்போது தான் அது நிறைவேறி இருக்கிறது.

இப்படத்தில் மணிரத்னத்துடன், நாடக கலைஞரும் நடிகருமான இளங்கோ குமரவேல் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்நாவல் படமாவதற்கு முன்னரே, நாடகமாக ரசிகர்களுக்கு கொண்டு வந்தவர். இவர் நாடகம் பலரிடமும் பிரபலமாக இருந்தது. இதனால் இவருக்கு பொன்னியின் செல்வனில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் தனது அனுபவங்கள் குறித்து விரிவாக விளக்கி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன்

அதில், படத்தின் கதாபாத்திரங்களை தேர்வு செய்தது எல்லாம் மணிரத்னம் தான். 140 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்தனர். நாவலில் ஒளிந்திருந்த சில காட்சிகளை கூட இதில் காட்சிப்படுத்தி இருக்கோம். வந்தியதேவன் மற்றும் பொன்னியின் செல்வன் இருவரும் சண்டையிடுவது கூட ஒரு பெரிய உதாரணம். இப்படத்தில் நான் நடிக்கவில்லை என்பது குறையாக இருக்கிறது. இருந்தாலும், மணிரத்னம் மற்றும் ஜெயமோகனுடன் என் பெயரும் வருவது எனக்கு பெரிய பெருமையாக தான் இருக்கிறது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் விவகாரம்.. சிண்டு முடிஞ்சு விடும் சிம்பு.. சொன்னதே அவர் தானாம்…

மேலும், சோழ வம்சத்தில் பிரச்சனை ஏற்பட்ட போது ஆதித்ய கரிகாலன் அகாலமரணம் அடைகிறார். பின்னர் மதுராந்தகன் ராஜாவாகிறார். தொடர்ந்து, அவர் பதவியில் இருந்து விலகியதும், ராஜராஜ சோழன் மீண்டும் பதவிக்கு வந்து, கரிகாலன் மரணத்துக்கு தண்டனை கொடுக்கிறார். நாவலில் கூட யார் கொலை செய்தார் என்பதை தெளிவாக கூறவில்லை. தண்டனை கொடுக்கப்பட்ட ரவி தாசன் கூட நாட்டுக்கு சதி செய்ததாகவே கூறப்பட்டு தண்டனை கொடுக்கப்படும். ஆனால், இவர் தான் கொன்றார்கள் என்பதை கல்கி கூறிவிடமாட்டார். அதை பலரின் நோக்கமாக வைத்து இப்படி இருக்கலாம் என நம் கையிலே கொடுத்திருப்பார்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எங்கு முடியும் என்பது ட்ரைலரிலேயே இருக்கிறது. அதுபடி தான் முதல் பாகம் முடியும் எனக் கூறி இருக்கிறார். ஜாவ் ஜாவ் எல்லாரும் ட்ரைலர் பாக்க போங்க..!

Next Story