Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட ப்ரதீப் ஆண்டனிக்கு மனநல பிரச்னை இருப்பதாகவும் அவர் டாக்டரை பார்க்க வேண்டும் எனவும் பலரும் கூறிய நிலையில் அமீரின் சமீபத்திய பேட்டியில் பதிலளித்து இருக்கிறார்.
பிக்பாஸ் இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே உச்சத்தில் இருந்தவர் ப்ரதீப் ஆண்டனி. இவர் தான் கப்பை கூட வெல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இருந்தும் அவர் பேசியது பல இடங்களில் சர்ச்சையானது. அப்போதெல்லாம் போட்டியாளர்கள் கூட அவரை மெண்டல் என முத்திரை குத்தினர்.
இதையும் படிங்க: பாடிஷேம் பண்ண நிக்சன்.. சும்மா புரட்டி எடுத்த பாரதி கண்ணம்மா.. வெளியே வந்தா அவ்ளோதான்!..
ஒரு இடத்தில் விஜய் வர்மா அவரின் குழந்தை பருவத்தில் நடந்த சில விஷயங்களை கேலிக்கு உள்ளாக்கினார். அதனால் ப்ரதீப் பல இடங்களில் கோளாறு செய்வதாக அவருக்கு மனநல பிரச்னை இருப்பதாகவும் பலர் கூறினர். இதில் வனிதா வா நல்ல டாக்டரை பார்க்கலாம் என ஓபனாகவே ரிவியூ ஒன்றில் பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து 5வது சீசனில் கலந்து கொண்ட நடன இயக்குனர் அமீர் அளித்திருக்கும் பேட்டி சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதில், ப்ரதீப்புக்கு குழந்தை பருவத்தில் நடந்த விஷயத்தால் மனநலம் சரியில்லை என பலரும் கேலி பேசுகின்றனர். அதெல்லாம் உண்மையில்லை.
இதையும் படிங்க: ஜோவிகா வைத்து கமல் மீது கேஸ் போடுவேன்.. குண்டை போட்ட வனிதா.. தேவையா ஆண்டவரே இதெல்லாம்..?
அவருக்கு அப்படி எதுவும் இருந்தால் இத்தனை படங்கள் பண்ணி இருக்க முடியுமா? ஏன் எனக்கும் தான் சின்ன வயசில் நிறைய நடந்து இருக்கிறது. நான் அப்படியா நடந்து கொள்கிறேன். அவர் எனக்கு என்னவோ நார்மலாக தானே நடந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது.
மேலும், பிக்பாஸுக்கு தேர்வு செய்யும் போது நிறைய டெஸ்ட் எடுப்பார்கள். ஒரு மனநல டாக்டரை வைத்து கேள்வி கேட்பார்கள். அதுக்கு நாம் சொல்லும் பதில் எப்படி இருப்பது எனக் கேட்பார்கள். அப்படி பிரச்னை வைத்துக்கொண்டு ஏமாற்றி எல்லாம் உள்ளே போகவே முடியாது. இது பிபி போட்டியாளர்களுக்கும் தெரியும் தானே என உடைத்து பேசி இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில்…
பொங்கல் ரிலீஸாக…
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…