3 கோடி கடனுக்கு 13 கோடி வட்டி கேட்டா நியாயமா? தனுஷுக்கு நடந்த பிரச்சினையே இதுதான்
Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தனுஷின் மீது ரெட் அலர்ட் போடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதை இப்போது நீக்கி உள்ளதாகவும் செய்திகள் சொல்லப்படுகிறது. அதற்கு பின்னணியில் அமைந்த காரணம் என்ன என்பதை பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் முரளி சாமியிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு படம் நடித்துக் கொடுப்பதாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட தனுஷ் அதன் பிறகு அவருக்கு படம் நடிக்கவில்லை என்ற ஒரு புகாரின் அடிப்படையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பயில்வான் ரங்கநாதன் கூறும்போது ஆடுகளம் படத்தை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் அந்த படத்தின் மூலம் பெரும் தொகை அவருக்கு லாபமாக கிடைத்து இருக்கிறது,
இதையும் படிங்க: மீண்டும் டைரக்ஷனில் களமிறங்கும் தனுஷ்… ஆனா இது நடக்கிறதுக்கான காரணமே வேறயாம்…
அந்த அளவுக்கு படமும் வசூலில் சாதனை படைத்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 5 ஸ்டார் கதிரேசன் தனுஷுக்கு ஒரு கோடி கொடுத்தாராம். அது ஏன் என தனுஷுக்கு தெரியவில்லை.கேட்டதற்கு இப்போதைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் கூறி அந்த பணத்தை கொடுத்தாராம்.ஆனால் அது இன்னொரு படத்திற்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் என்று பின்னர்தான் தனுஷுக்கு தெரிந்திருக்கிறது.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து தனுஷ் ஒரு தயாரிப்பாளராக படத்தை எடுக்க அவருக்கு பணம் தேவைப்பட்டதாம். அப்போது பைவ் ஸ்டார் கதிரேசனிடம் 3 கோடி ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்று இருக்கிறார் தனுஷ். கடன் பெற்றதிலிருந்து ஒரு வருடம் வட்டியும் தவறாமல் செலுத்தி விட்டாராம் தனுஷ். அதன் பிறகு பைவ் ஸ்டார் கதிரேஷனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையும் படிங்க: கட்சிக் கொடி அறிமுக விழாவில் குடும்பத்தை அழைக்காத விஜய்! இதுதான் காரணமா?
அவரும் பணத்தை பற்றி தனுஷிடம் ஏதும் கேட்கவில்லையாம். சரியாக மூன்று , நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு தனுஷ் யாரும் எதிர்பார்க்காத ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். வரிசையாக படங்கள் எனப் படுபிசியாக மாற 5 ஸ்டார் கதிரேசனுக்கு படம் நடித்துக் கொடுக்க முடியாமல் போகும் சூழ்நிலை தனுஷுக்கு ஏற்பட்டது.
இதனால் கோபமான 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பாளர் சங்கத்திடம் தனுஷ் தனக்கு 13 கோடி ரூபாய் வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும் என அவர் மீது புகாரை கொடுத்தாராம் .அதற்கு முன்னதாகவே தனுஷும் நடிகர் சங்கத்திடம் இதைப் பற்றி பேசி இருக்கிறார். இந்த பிரச்சனை தான் இப்போது பூதாகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: மூணு பாட்டும் புஸ்ஸுனு போச்சி!.. நாலாவது சிங்கிளாவது தேறுமா?!.. கோட் பட புது அப்டேட்!..
கடைசியில் நடிகர் சங்கத்திலிருந்து தனுஷிடம் அவர் கேட்பதைப்போல ஒரு படம் நடித்து கொடுத்து விடலாமே என சொல்ல தனுஷோ ஈகோ பிரச்சனையில் ‘கடனை வேண்டுமென்றால் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். வாங்கிய மூன்று கோடி ஏற்கனவே அவர் கொடுத்த ஒரு கோடி மொத்தம் நான்கு கோடிக்கு மூன்று வருஷத்துக்கு வட்டி என்னவோ அதை நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அவருக்கு என்னால் படம் நடித்துக் கொடுக்க முடியாது’ என கூறிவிட்டாராம்.
ஆனால் பைவ் ஸ்டார் கதிரேசன் தரப்பிலிருந்து ‘சரி நானே படம் எடுத்துக் கொள்கிறேன். வருகிற லாபத்தில் 75% லாபம் தனுஷுக்கு இருக்கட்டும். 25 சதவீத லாபத்தை நான் எடுத்துக் கொள்கிறேன். அதில் கடனையும் நான் கழித்துக் கொள்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.
ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து முதல் பிரிண்ட் அடிப்படையில் பேசுங்கள். ப்ரொடக்ஷன் தரப்பில் இருந்து அதிகம் செலவாகி விட்டது என்றால் என்ன செய்ய முடியும்? அதை நாங்கள் கேட்க முடியாது அல்லவா? அதனால் முதல் பிரிண்ட் என்ற அடிப்படையில் சொல்லுங்கள். அதன் பிறகு இதைப் பற்றி நாம் பேசுவோம் என சொல்லி இருக்கிறார்களாம்.