நெருப்புல நெய்ய ஊத்துன லோகேஷ்! அதிரிபுதிரியா ‘லியோ’ வெற்றிவிழா நடத்துவதற்கு இதுதான் காரணமா?

by Rohini |
leo
X

leo

Leo Success Meet: இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நடக்க இருக்கிறது லியோ படத்தின் சக்சஸ் மீட். இந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒரு புதுமையான குட்டி ஸ்டோரியுடன் விஜய் இன்று கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் உரையாடுவதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் பிரச்சினை, லியோ வசூல் போலி நிலவரம், குடும்ப பிரச்சினை என இவைகளை தாண்டி நடைபெறும் விழாவாக இந்த வெற்றி விழா அமைய இருக்கிறது.அதனால் விஜயின் அந்த பேச்சை கேட்க திரையுலக பிரபலங்களில் இருந்து ரசிகர்கள் வரை ஒரே எதிர்பார்ப்பில்தான் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: எட்டே படம்… கோடீஸ்வர அப்பா.. வெளியில் தெரியாத குடும்ப விவரம்… காணாமல் போன ஹீரோ..! ஆச்சரிய தகவல்..!

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தாமல் இப்படி திடீரென வெற்றி விழாவை நடத்துவதற்கான காரணத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார். இசை வெளியீட்டு விழாவை நடத்தாமல் விட்டதனால் அந்த பழி அப்படியே ஆளும்கட்சி மேல் விழுந்தது. இதுதான் இவர்களுக்கு வேண்டும்.

அப்படித்தான் பேச்சும் வந்தது. மேலும் லோகேஷ் கொடுத்த பேட்டிகள் எல்லாம் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகிற மாதிரியே இருந்தது. இந்த விமர்சனத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்றால் கண்டிப்பாக வெற்றிவிழாவை நடத்த வேண்டும் என படத்தயாரிப்பாளர் விஜயிடம் சொன்னதாகவும் விஜயும் சம்மதம் சொன்னதாகவும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் புகை, மது அருந்தாமல் இருந்ததற்கு காரணமான சம்பவம்!. இவ்வளவு நடந்திருக்கா!…

லியோ படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகை சார்ந்த பிரபலங்களும் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் இதை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் இந்த விழாவை நடத்துகிறார்கள் என கூறினார்.

Next Story