எனது அமெரிக்க விசாவிற்கு இவர்தான் காரணம்.! உண்மையை உளறிய கொட்டிய ஷங்கர்.!

Published on: January 24, 2022
shankar
---Advertisement---

இயக்குனர் ஷங்கர் அதிக பட்ஜெட்டில் ஒரு நல்ல படத்தை எடுப்பதில் பிரபலமானவர், மேலும் அவர் பாக்ஸ் ஆபிஸில் இரண்டு மடங்கு பட்ஜெட்டை எட்டுவார். இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ராம் சரண் நடிக்கும் இந்தப் படம் RC15 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.

இந்நிலையில, ஷங்கர் முதன் முறையாக அமெரிக்கா செல்ல முற்பட்ட போது, அமெரிக்க விசாவுக்கு இன்டெர்வியு சென்றுள்ளார். அங்குள்ள அமெரிக்க அதிகாரி, ஷங்கர் என்ன கூறினாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

இதையும் படியுங்களேன் …  நாங்கலாம் என்ன சொம்பையா?… விஜய் சொன்ன வார்த்தையில் கடுப்பான அட்லீ, லோகேஷ், AR.முருகதாஸ்.!

உடனே அங்கிருந்த இந்திய அதிகாரி, இவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் காதலன் படத்தில் வரும் முக்கால முக்காபுலா பாடல் இருக்கும்ல அந்த பாடலை இயக்கியவர் என கூறியதும் உடனே அந்த அதிகாரி அந்த பாடல் இயக்குநரா என விசாவை ஓகே செய்துவிட்டார்.

இந்த முக்கால முக்காபுலா பாடலை எழுதியவர் என்றும் இளமை ததும்ப பாடல்களை எழுதும் கவிஞர் வாலி. இதனை கவிஞர் வாலிக்கு நடந்த பாராட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார்.

Leave a Comment