14 வருட காதல்… கடத்தல் செய்கிறாரா கணவர்… முதல்முறையாக உண்மையை உடைத்த வரலட்சுமி!...
Varalaxmi Sarathkumar: நடிகை வரலட்சுமி சரத்குமார் பொதுவாக கோலிவுட்டின் வாரிசு நடிகையாக வந்தவர் என்றாலும் நடிப்பில் பெரிய ஹிட்டடித்தவர். அவரின் திடீர் நிச்சயத்தார்த்த நிகழ்வு வைரலான நிலையில் தன்னுடைய கணவர் குறித்து சில ஆச்சரிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமாரின் முதல் மகள் தான் வரலட்சுமி. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் விக்னேஷ் சிவனின் போடா போடி படத்தின் மூலம் நடிப்புக்கு எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் சிம்புவுடன் ஜோடி போட இருவருக்குமான கெமிஸ்ட்ரியே பெரிய அளவில் ஹிட்டடித்தது.
இதையும் படிங்க: முரளி அந்த விஷயத்துல ரொம்பவே வீக்காம்… பிரபல இயக்குனர் என்னா சொல்றாருன்னு தெரியுமா?
இதை தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தது. ஹீரோயினாக சில படங்களில் நடித்தவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வில்லியாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனால் தொடர்ச்சியாக நெகட்டிவ் கதாபாத்திரங்களை ஏற்று வந்தார். இந்நிலையில் திடீரென மும்பையை சேர்ந்த கேலரி ஆர்ட்டிஸ்ட்டுடன் நிச்சயத்தார்த்தம் நடந்தது.
இது ரசிகர்கள் பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் வருங்கால கணவரை பலரும் தொடர்ச்சியாக கலாய்த்து வந்தனர். இதனை தொடர்ந்து தன்னுடைய திடீர் நிச்சயம் குறித்து முதல்முறையாக வரலட்சுமி சரத்குமார் மனம் திறந்துள்ளார். அப்பேட்டியில் இருந்து, நிகோலய் சச்தேவ்யை பொருத்தவரை, அவரின் தந்தை ஆர்ட் கேலரி வைத்து இருந்தார்.
இதையும் படிங்க: புதுசா யோசிக்கவே தெரியாதா? இன்னும் அரைச்ச மாவையே அரைச்சி தலைப்பு வைக்கும் இயக்குனர்கள்!
கிட்டத்தட்ட 30 வருடங்களாக தொழில் செய்து வந்தவர், திடீரென பக்கவாதம் வந்து படுக்கையானார். அதனால் என்னுடைய வருங்கால கணவர் 16 வயதிலேயே இந்த தொழிலுக்கு வந்து விட்டார். ஆர்ட் கேலரி என்றவுடன் கடத்தல் பொருட்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்கு கலைத்தன்மை கொண்ட, விலையுர்ந்த கலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. சிலர் ஆர்ட் கேலரி என்றவுடன் கடத்தல் என நினைத்து கொள்கிறார்கள்.
என் வருங்கால கணவரை எனக்கு 14 வருடமாக தெரியும். இப்போது தான் கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம். என் அம்மா ராதிகா, அப்பா சரத்குமாரை அழைத்து எனக்கு அவர்கள் முன்னர் புரபோஸ் செய்தார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் பிடிக்காது என்பதால் இந்த விஷயம் பலருக்கு தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.