காலேஜுல இருந்தே விஜய் இப்படித்தான்! அதுதான் அரசியல் வர காரணம்.. கூடவே இருந்து பார்த்தவரே சொல்லிட்டாரு

by Rohini |   ( Updated:2024-08-11 03:06:24  )
vijay (2)
X

vijay (2)

Actor Vijay: விஜயின் அரசியல் முடிவு இன்று வரை அனைவருக்கும் ஒரு ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்று கோலிவுட்டின் மிகப்பெரிய வசூல் சக்கரவர்த்தியாக அறியப்படும் விஜய் இந்தளவு புகழ் இருக்கும் போதே சினிமாவை ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் இந்த சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் அவருக்கு இருக்கும் அக்கறை எந்தளவு முக்கியத்துவமாக இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

கமல், ரஜினி , அஜித் இவர்கள்தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க எதிர்பாராத ஒரு ட்விஸ்டை கொடுத்தார் விஜய். யாருமே விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அரசியலில் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக தனது அரசியல் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அஜித் நடிக்க வேண்டிய கதாபாத்திரமா அது? எவ்ளோ பெரிய விஷயம்? சாதாரணமா சொல்றாரே

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நேரடியாக எதிர்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் எப்படி விஜய் அரசியலுக்கு வந்தார் என்பதற்கான காரணத்தை விஜயின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

விஜய் கல்லூரியில் படிக்கும் போதிருந்தே அவரிடம் அனைவரையும் வழிநடத்தும் அந்த பண்பு இருக்குமாம். கல்லூரி விழா ஆகட்டும், எந்தவொரு சின்ன சின்ன நிகழ்ச்சிகளாகட்டும் அதில் விஜய்தான் முதன்மையாக இருந்து நல்லபடியாக கொண்டு செலுத்துவாராம்.

அவருக்கு கீழ் ஸ்ரீநாத், சஞ்சீவ் இவர்கள் அடுத்த நிலையில் இருந்து விஜய்க்கு உதவியாக இருப்பார்களாம். அதுமட்டுமில்லாமல் தன் தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன்பே விஜய் தன்னை தயார்படுத்திக் கொள்வாராம்.

இதையும் படிங்க: விஜய் பட வில்லனுக்காக மொட்டை போட்டுக்கொண்ட சோ!.. இது யாருக்காவது தெரியுமா?….

அதை போல்தான் அரசியலுக்கு வருவதற்கு முன் விஜய் அவரை தயார்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறார் என ஸ்ரீநாத் கூறினார். அதனால் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்றும் ஸ்ரீநாத் கூறியிருக்கிறார். மேலும் அவருடை அப்பாவும் மறைமுகமாக தன் படங்களின் மூலமாக அரசியல் குறித்து பலவற்றை தெரிவித்திருக்கிறார். அவரிடம் இருந்தும் விஜய் அரசியல் அனுபவங்களை பெற்றிருக்கிறார்.

அதனால் கண்டிப்பாக விஜயின் அரசியல் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஸ்ரீநாத் கூறினார். பள்ளியில் படிக்கும் போது விஜய் எப்போதும் தனியாகத்தான் இருப்பாராம். கல்லூரியில் வந்த பிறகுதான் எங்களுடைய நட்பு விஜய்க்கு கிடைக்க அது இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கின்றது என ஸ்ரீநாத் கூறினார்.

இதையும் படிங்க: இது வேற லெவல் ப்ரோமோஷன்! புது ரூட்டில் சூரி.. என்னெல்லாம் பண்றாரு பாருங்க

Next Story