Categories: Cinema History Cinema News latest news

இரட்டைக் குதிரை சவாரியில் ஜெயிக்க இதுதான் காரணமாம்… மெல்லிசை மன்னர் சொன்ன ரகசியம்

ஒரு உறையில் 2 கத்தி இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படி 2 பேரும் ஜாம்பவான்களாக இருந்தால் நடுநாயகமாக இருப்பவர் யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்? அவர் பாடு திண்டாட்டம் தான். இது இரட்டைக்குதிரை சவாரி மாதிரி தான். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழலில் எவ்வித பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் பயணம் செய்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

இதையும் படிங்க.. கர்ப்ப வயிற்றுடன் கல்கி பட புரமோஷனில் பங்கேற்ற பிரபல நடிகை!.. கமல்ஹாசன் அந்த ரோலில் நடிக்கலையா?..

கவிஞர் கண்ணதாசன், வாலி இருவரும் தமிழ்சினிமா உலகில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் தொடர்ந்து பயணித்தவர் எம்எஸ்.விஸ்வநாதன். ‘இதயத்தில் நீ’ என்ற படம் தான் என்னுடைய இசை அமைப்பில் வாலி முதன் முதலில் பாடல் எழுதினார். அவர் எழுதிய பாடல் வரிகளைப் பார்த்த உடனே நான் அசந்து போய்விட்டேன்.

‘கற்பகம்’ படத்தில் இசை அமைத்த போது அந்தப் படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் வாலிக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம்னு கேட்டேன். அந்த இயக்குனரைப் பொருத்தவரை தன்னோட படத்துக்கு கண்ணதாசன் தான் பாடல் எழுதணும்னு நினைப்பார்.

மற்ற யாரையும் பாடலாசிரியராக ஏற்றுக் கொள்ள மாட்டார். நான் கேட்டுக்கொண்டதால் அந்தப் படத்திற்கு வாலியைப் பாடல் எழுத வைத்தார். அவர் எழுதிய பாடல்களைப் பார்த்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அசந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

வாலி வளர்ந்து வந்த காலகட்டத்தில் விசு நம்மை விட்டுட்டு ஓடிருவானோ என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு வந்ததாம். அந்தக் காலகட்டத்தில் எல்லோரிடமும் சமமாகப் பழகியதால் கண்ணதாசனின் அந்த சந்தேகத்தைப் போக்கினேன் என்கிறார் எம்எஸ்வி.

இதையும் படிங்க.. கை நிறைய காசு! யாருக்கு கிடைக்கும்? மதி கெட்டுப் போய் கமல் படத்தில் மிஸ் செய்த பொன்னம்பலம்

ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு வாலியும், சிவாஜிக்கு கண்ணதாசனும் பாடல்களை எழுதினார்கள். அவர்கள் 2 பேருடனும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நான் பணியாற்றியதற்கு அதுவும் முக்கிய காரணம் என்கிறார் மெல்லிசை மன்னர்.

 

Published by
sankaran v