எம்.ஜி.ஆர் விரும்பி சாப்பிடும் அந்த உணவு!. அதுவே அவரின் உயிருக்கு உலை வச்சிடுச்சே!...

by சிவா |   ( Updated:2024-08-09 10:53:19  )
mgr
X

MGR: தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் மறக்க முடியாத ஒரு சரித்திரத்தை எழுதி விட்டு போனவர்தான் எம்.ஜி.ஆர். 7 வயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க துவங்கி தனது 37வது வயதில் சினிமாவில் நுழைந்தார். ஆனாலும், ஹீரோ வாய்ப்பு கிடைக்காததால் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

தனது 47வது வயதில்தான் எம்.ஜி.ஆர் ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதாவது 7 வயதில் நாடகங்களில் நடிக்க துவங்கிய எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் ஹீரோவாக மாற 40 வருடங்கள் தேவைப்பட்டது. துவக்கத்தில் அவர் நடித்தது எல்லாமே சரித்திர படங்கள்தான்.

அப்படி வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் எம்.ஜி.ஆருக்கு அதிகமான ரசிகர்களை கொண்டு வந்தது. அந்த படத்த தனது சொந்த செலவில் எடுத்து இயக்கி நடித்தார் எம்.ஜி.ஆர். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின் சமூக படங்களிலும் கலக்கினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் வரை அவரின் மார்க்கெட்டை யாராலும் அசைக்க முடியவில்லை. அரசியலில் தீவிரமாக இறங்கி தமிழகத்தின் முதலைமைச்சராக தொடார்ந்து இருந்ததால் அவரால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விட்டது. எப்படியாவது நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால், அவரின் பதவி அவரை அனுமதிக்கவில்லை.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என நினைத்த எம்.ஜி.ஆர். தினமும் உடற்பயிற்சி செய்வார். உணவு கட்டுப்பாடும் அவருக்கு உண்டு. ஆனாலு,ம் அவர் விரும்பி சாப்பிட்ட கருவாடு அவருக்கு எமனாக வந்தது. கருவாட்டில் இருந்த உப்பு அவரின் சிறு நீரகத்தை அதிகம் பாதித்தது. இதனால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு நீர்ச்சத்து குறைந்து இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தொடர்ந்து சில நோய்கள் அவருக்கு ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்து போனது. பக்கவாதம் ஏற்பட்டது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

எனவே, அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் ரீதியாக இவ்வளவு பிரச்சனை இருந்தும் அவரின் ரசிகர்களின் பிரார்த்தனையால் அவர் உயிர் பிழைத்தார் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், சில வருடங்களில் அவர் மரணமடைந்தார்.

Next Story