‘ரோஜா’ படத்திற்கு பிறகு வாய்ப்பு கொடுக்காத மணிரத்தினம்! நடிகை சொன்ன ஷாக் சீக்ரெட்

Published on: February 27, 2024
roja
---Advertisement---

Roja Movie: 90கள் காலகட்டத்தில் காதலின் உணர்வை மிக ஆழமாக உணர்த்திய திரைப்படமாக அமைந்தது ‘ரோஜா’ திரைப்படம். மணி ரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் வெளியான ஒரு அழகான காவியம்தான் இந்த ரோஜா திரைப்படம்.

இந்தப் படத்தின் மூலம் முதன் முதலில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இசைஞானி ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார் ரஹ்மான். இதுவரை இந்த சினிமா கேட்டிராத ஒரு புதுமையான இசையை கொடுத்ததன் மூலம் ரஹ்மானை ரோஜா படத்திற்கு பிறகு கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இதையும் படிங்க: அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்த திரைப்படம்.. சத்தமே இல்லாமல் சாதனை செய்த சிம்பு

அந்த கொண்டாட்டம் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த காலகட்டத்திலாவது இசைஞானி என்ற ஒருவர்தான் பிரபலமாக இருந்தார். ஆனால் இப்போது ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் இருந்தும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பதே ரஹ்மான்தான். அதற்கு அடித்தளம் போட்ட படமாக ரோஜா படம் அமைந்தது.

படம் மிகப்பெரிய ஹிட் ஆனாலும் இந்தப் படத்திற்கு பிறகு மதுபாலா மணிரத்தினத்துடன் மறுபடியும் கூட்டணி சேரவே இல்லை. அதற்கான காரணம் என்ன என்பதை மதுபாலாவே கூறியிருக்கும் தகவல்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: சினிமாவுக்கு வருதற்கு முன் ஹோட்டலில் வேலை செய்த பிரலங்கள்!. அட இவ்வளவு பேரா?!..

ரோஜா படத்திற்கு பிறகு இருவர் படத்தில் நடித்தார் மதுபாலா. அதன் பிறகு அவருடைய ஆட்டிடியூட்தான் மீண்டும் மணிரத்தினத்துடன் சேராமல் போனதற்கு காரணம் என கூறியிருக்கிறார். ஒரு முறை மணிரத்தினம் படத்தில் நடித்து விட்டால் அந்த நடிகர் , நடிகைகள் எல்லாருமே மணிரத்தினத்துடன் டச்சிலேயே இருப்பார்களாம். ஆனாம் மதுபாலா மட்டும்தான் பேசாமல் இருந்தாராம்.

அதுவும் போக அவருக்கு குடிப்பழக்கமும் இருந்த காரணத்தால் சில காலம் சினிமாவில் இருந்து விலகியும் இருந்திருக்கிறார். ஆனால் இப்போது மீண்டும் செகண்ட் இன்னிங்ஸ் எடுத்திருக்கிறார் மதுபாலா.

இதையும் படிங்க: வளர்ந்து கொண்டே இருக்கும் பாக்கியா!… மொத்தமாக ராதிகாவிடம் கையும், களவுமாக சிக்கிய கோபி!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.