Vijayakanth: தமிழ் சினிமாவில் எத்தனையோ பல நல்ல நடிகர்களை நாம் சந்தித்திருக்கிறோம். அதில் சில பேரை மட்டும்தான் காலம் கடந்தும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். நடிப்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் சிவாஜி. அதை போல நல்ல குணத்திற்கு உதாரணமாக வாழ்ந்தவர் எம்ஜிஆர். அந்த வரிசையில் இப்போது விஜயகாந்தும் இணைந்திருக்கிறார்.
ரஜினி, கமலுக்கு டஃப் கொடுத்த நடிகர்: ரஜினி கமல் என இருவருமே ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தன் கையில் வைத்திருந்த சமயம். அப்போது திடீரென முளைத்து வந்தார் விஜயகாந்த். வில்லன் , துணை நடிகர் என ஆரம்பத்தில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பின்னாளில் ரஜினி கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார் விஜயகாந்த். பார்ப்பதற்கு ரஜினியை போன்ற தோற்றத்தில் இருந்ததனால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.
இதையும் படிங்க: Vijay: இதெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி காலத்துலயே பண்ணிட்டாங்க… விஜய் செஞ்சது பழைய டெக்னிக் தான்..!
எம்ஜிஆர் போன்ற குணம்: ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் எம்ஜிஆருக்கு அடுத்த படியாக இருந்தவர் விஜயகாந்த். யாருக்காவது எந்த நேரத்தில் உதவி வேண்டுமானாலும் உடனே ஓடி வந்து உதவி செய்வார். அப்படித்தான் ஒரு சமயம் இரவு 12 மணி இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதோ பிரச்சினை என போன் வர உடனே அங்கு சென்று அந்த பிரச்சினயை தீர்த்து வைத்தார் விஜயகாந்த்.
இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் அஜய் ரத்தினம் விஜயகாந்தை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அஜர் ரத்தினம் பல படங்களில் வில்லனாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் ராதிகாவின் சித்தி தொடரில் நடித்து மிகப்பெரிய புகழ் பெற்றார். அதில் ராதிகாவிற்கு மேலாளராக அஜய் ரத்தினம் நடித்திருப்பார். அவர் கூறியதாவது:

100 படங்களில் மாறாதது: விஜயகாந்த் 100 படங்கள் நடித்திருப்பார். அந்த 100 படங்களுக்கும் ஒரே கேமிரா மேன் தான். ஒரே மேனேஜர்தான்.ஒரே காஸ்டியூமர்தான். நேரடியாக அவரே மக்களை வந்து சந்தித்து லவ் பண்றவரு. எம்ஜிஆருக்கு அப்புறம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு என்ற முறையை கொண்டு வந்தார் விஜயகாந்த் என அஜய் ரத்தினம் கூறினார்.
இதையும் படிங்க: Sivakarthikeyan: அடுத்த விஜய்?!. நான் நேத்து வந்தவன்!. அது ரொம்ப ஸ்பெஷல்!.. ஃபீல் ஆகும் எஸ்.கே…
எல்லா வகை உணவு: மூன்று வகை உணவுகள் இருக்கும். கோழி, மீன், ஆட்டிறைச்சி என எல்லா வகை உணவுகளும் கண்டிப்பாக தினமும் இருக்கும். கூடவே முட்டையும் இருக்கும். தான் மட்டும் சாப்பிட்டால் போதாது. அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என எல்லாருக்குமே இந்த உணவுகள்தான் பரிமாறப்பட்டது. விளையாடிட்டே இருப்பார். அதுவும் எல்லாரிடமும் ஹேப்பியா விளையாடிட்டே இருப்பார்.
கேப்டன் என்ற பெயர்: யாருக்காவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் என்றால் உடனே விஜயகாந்தை பார்க்க வந்து விடுவார்கள். வாழ்த்துக்களை பெற்று செல்வார்கள். அதனால்தான் அவருக்கு கேப்டன் என்ற பெயர் வந்தது. இந்தளவுக்கு இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். இப்படிப்பட்ட குணம் படைத்தவரை இன்று வரை கொண்டாடுவதற்கு இதுதான் காரணம் என அஜய் ரத்தினம் கூறினார்.
