Cinema News
சுந்தர்.சி, பார்த்திபன் தொடர்ந்து வடிவேலுவை படத்தில் பயன்படுத்தாத காரணம்! ஓ இப்படி ஒரு பிரச்சினையா?
Actor Vadivelu: சுந்தர் சியின் பெரும்பாலான படங்கள் காமெடியாகத்தான் இருக்கும். என்னுடைய படங்களில் காமெடிக்கு எப்பொழுதுமே பஞ்சமிருக்காது என்று ஒரு பேட்டியில் சுந்தர் சியே சொல்லியிருக்கிறார். அவர் எடுக்கும் ஹாரர் படங்களிலும் நகைச்சுவையை எப்படியாவது திணித்து விடுவார். சுந்தர் சியின் ஆரம்பகால படங்களை எடுத்துக் கொண்டால் கவுண்டமணிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
ஹீரோ கால்ஷீட் கிடைக்கிறதோ இல்லையோ கவுண்டமணி கால்ஷீட்டைத்தான் முதலில் ஃபிக்ஸ் பண்ணுவார். அதைப் போல் சமீபகால படங்களில் வடிவேலுவை குறி வைத்து தூக்கினார். வடிவேலுவை வைத்து எடுத்த அத்தனை படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றது. அந்தளவுக்கு நகைச்சுவை பெரிய அளவில் அமைந்திருந்தது.
இதையும் படிங்க: அதுக்கு ஆசைப்பட்டு இங்க வந்து மாட்டிக்கிட்டோமே… இயக்குனரிடம் வசமாக சிக்கிய சின்னக் கலைவாணர்!..
வின்னர் படத்தில் கட்டதுரை காமெடியை யாராலும் மறக்க முடியாது. அதே போல் ‘விட்டத்தை பார்த்து அண்ணாந்து படுக்கிற சுகம் இருக்கே ’ என்று வடிவேலு சொல்லும் போது திரையரங்கில் சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு படமும் ஹிட்டானது. படத்தில் அமைந்த காமெடியும் ஹிட்டானது. அதே போல் சுந்தர் சியின் இன்னொரு படமான கிரி படத்திலும் இவருடைய காமெடி வொர்க் அவுட் ஆனது.
வீரபாகுவாக வடிவேலு நடித்திருப்பது அக்காவுக்காக பேக்கரி காமெடியும் இன்றளவும் பெரிய வரவேற்பை பெற்ற காமெடியாக மாறியிருக்கிறது. ஒரு சுந்தர் சி என்றால் இன்னொரு பக்கம் வடிவேலுவை துவம்சம் செய்தவர் பார்த்திபன். துபாய் காமெடியெல்லாம் மறக்க முடியுமா? அல்லது குண்டக்க மண்டக்கா காமெடியைத்தான் மறக்க முடியுமா?
இதையும் படிங்க: நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா
வடிவேலுவுடனான இந்த இரண்டு பேர் கூட்டணி சேர்ந்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சினையா என்று சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் கேட்ட போது ‘பார்த்திபன் சமீபகாலமாக பட்ஜெட் உள்ள படங்களையே எடுத்து வருகிறார். அதனாலேயே அவர் படங்களில் வடிவேலு நடிக்க முடிவதில்லை . ஆனால் சுந்தர் சி சமீபகாலமாகவே வடிவேலுவை தவிர்த்துதான் வருகிறார். அது ஏன் என எனக்கு தெரியவில்லை’ என சித்ரா லட்சுமணன் கூறினார்.