Biggboss Tamil 7
ரவீனாவின் அம்மா வராததற்கு காரணம் இதுதானா? உள்ளே வந்த ஆண்டி – டோட்டல் டேமேஜ் ஆன மணி
BiggBoss: பிக்பாஸில் இந்த வாரம் முழுவதும் குடும்பங்கள் கொண்டாடும் வாரமாக போய்க் கொண்டிருக்கிறது. வாரம் முதலே போட்டியாளர்களின் வீட்டிலிருந்து அவர்களது உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். உள்ளே வந்ததும் சம்பந்தப்பட்ட போட்டியாளர்களிடம் சில டிப்ஸ்களையும் அறிவுரைகளையும் சொல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக விஷ்ணுவின் அக்கா நேரடியாகவே விஷ்ணுவிடம் இதெல்லாம் நமக்கு தேவையே இல்லை என்று பூர்ணிமாவை பற்றி மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். பூர்ணிமாவின் அம்மா உள்ளே வந்ததும் நேராக விசித்ராவிடம் போய் சாரி கேட்கிறார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு ப்ரோமோஷனை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க! ‘லால்சலாம்’ படத்திற்காக ரஜினி கொடுக்கப் போகும் கிஃப்ட்
அர்ச்சனாவை கட்டியணைத்து என் செல்லமே என கொஞ்சுகிறார். இதெல்லாம் பூர்ணிமாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று ரவீனாவின் வீட்டில் இருந்து சில பேர் உள்ளே வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் ரவீனா இது யாரு? அம்மா வரலையா என கேட்கிறார்.
உண்மையிலேயே அவர்கள் ரவீனாவின் நெருங்கிய நண்பரின் அம்மாவாம். ரவீனாவிற்கு ஆண்டியாக இருந்தாலும் அம்மா ரேஞ்சுக்கு கடுமையாக ரவீனாவிடம் கேள்விக்கனைகளை திருப்புகிறார். இதற்காகத்தான் வந்தீயா? உன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எங்கே? போய் அவனிடம் இருந்து வாங்கிட்டு வா. அப்புறம் பேசு என திட்டி தீர்க்கிறார்.
இதையும் படிங்க: ஆஸ்காரை தட்டி தூக்குவது உறுதி! அத எப்படிபா லைவ்ல எடுத்தாங்க? ஆச்சரியப்படுத்திய ‘தங்கலான்’
அதுமட்டுமில்லாமல் நைட் நேரத்தில் ஒழுங்கா தூங்குறீயா ? முழுவதும் பேசிக் கொண்டே தான் இருக்கிறீர்கள் என கூறிவிட்டு மணியையும் லெஃப்ட் ரைட் வாங்குகிறார். மணியிடம் தனியா பேசத்தான் இங்க வந்தீங்களா? என கேட்கிறார். கடைசியில் ரவீனாவிடம் ‘code red’ என சொல்லி பிரதீப் மேட்டரையும் அதனால் வெளியில் ரவீனாவிற்கு கிடைத்த பேரையும் சொல்ல முற்பட ,
அதற்குள் பிக்பாஸ் ரவீனாவின் உறவினர்களை வெளியேற செய்துவிட்டார். இதையெல்லாம் பார்க்கும் போது நண்பரின் அம்மாவுக்கே ரவீனா மீது இவ்வளவு கோபம் என்றால் அம்மாவுக்கு எந்தளவு கோபம் இருக்கும் என புரிய முடிகிறது. அதனால்தான் வரவில்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க: 16 ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியுடன் மீட்டிங்!.. லைக்காவுக்கு போட்டியா களமிறங்கும் தயாரிப்பாளர்…