விஜயகாந்த் செய்ததை விட பெருசு இல்லயே! இளையராஜாவுக்காக இறங்கி வந்த வடிவேலு.. இதுதான் காரணமா

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தி சென்றிருக்கிறார் விஜயகாந்த். அவரின் புகழ் அறியாதவர்கள் அவர் இறப்பிற்கு பிறகு தெரிந்திருப்பார்கள். சரியாக அவர் இறந்த ஒரு மாதகாலம் ஆகியும் அவர் நினைவிடத்திற்கு இன்னமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இப்பொழுது உள்ள தலைமுறை நடிகர்களுக்கே இது ஒரு பெரும் அதிர்ச்சியாகக் கூட இருந்திருக்கலாம். விஜயகாந்துக்கு இவ்வளவு கூட்டமா என்று. அவர் செய்த காரியங்கள், உதவிகள், மக்களை பற்றிய அவருயடை பார்வை இது எல்லாமே சேர்ந்துதான் விஜயகாந்தை இந்தளவுக்கு மக்கள் நேசிக்க காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை நம்பி மீண்டும் கோலிவுட்டுக்கு வரும் சீமான்!… கதையில் அவர் கேரக்டர் என்ன தெரியுமா?

எங்கெங்கோ இருந்து விஜயகாந்த் நினைவிடத்தை பார்க்க வரும் ரசிகர்கள் மத்தியில் அவரால் பலனடைந்த வடிவேலு இன்னும் அவர் சமாதியை வந்து பார்க்கவில்லை. விஜயகாந்த் இறப்பிற்கு நேரிடையாக வந்து அஞ்சலி செலுத்தினால் கண்டிப்பாக விஜயகாந்த் ரசிகர்களே அவரை ஓட ஓட விரட்டியிருப்பார்கள். அதனாலேயே அவர் வரவில்லை. ஆனால் அவர் சமாதிக்கு வந்தும் பார்க்கவில்லை.

ஏன் அவருக்கு நடிகர் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் கூட்டத்திற்கும் வரவில்லை. 2000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வடிவேலுவுக்கு 5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொடுத்தவர் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் அவருடைய தொடர்ச்சியான படங்களிலும் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அதை எல்லாவற்றையும் மறந்து அரசியலில் அவரின் எதிராலிகளுக்கு சொம்பு தூக்கி விஜயகாந்துக்கே எதிராக திரும்பினார் வடிவேலு.

இதையும் படிங்க: ஐய்யயோ அந்த நடிகரா? வேணாம்.. பல பேர் சொல்லி தடுத்தும் துணிந்து நடித்த sms பட நாயகி

ஆனால் சமீபத்தில் இறந்த இளையராஜாவின் மகள் பவதாரணிக்காக வருந்தி முதல் ஆளாக இரங்கல் ஆடியோவை வெளியிட்டார் வடிவேலு. அதற்கு காரணம் வடிவேலுவை முதன் முதலில் பாடகர் வடிவேலுவாக இந்த திரையுலகிற்கு காட்டியது இளையராஜாதானாம். அதனால் அந்த நன்றிக்கடனுக்காக அவ்வாறு செய்தாராம். விஜயகாந்த் செய்ததை விடவா இளையராஜா செய்து விட்டார் என ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

 

Related Articles

Next Story