அஜித் பைக் ரேஸை விட இதுதான் காரணமாம்..- பயில்வான் ரங்கநாதன் சொன்ன சோகக்கதை!..
நடிப்பையும் தாண்டி பன்முக திறமைகளை கொண்டவர் தல அஜித். நடிப்பிலும் கூட அவர் ஒரு டாப் லெவல் கதாநாயகனாகவே இருந்து வருகிறார். கிட்டத்தட்ட நடிகர் விஜய்க்கு அடுத்து அதிக வருமானம் பெறும் இயக்குனராக அஜித் இருந்து வருகிறார்.
அஜித்தின் தனிப்பட்ட வாழ்வை பொறுத்தவரை அவரது பல ஆசைகள் நிறைவேறாமல் போயுள்ளன. எதார்ச்சையாகதான் சினிமாவிற்கு வந்தார் அஜித். அதற்கு முன்பு அவர் ஒரு கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்தார். பிறகு தனியாக கார்மெண்ட்ஸ் துவங்கினார்.
ஆனால் அது நஷ்டமடைந்தது. அப்போதுதான் அவருக்கு தெரிந்தவர்கள் மூலமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் வாய்ப்பு பெற்று சில படங்கள் நடித்த பிறகும் கூட எனக்கு சொந்தமாக கார்மெண்ட்ஸ் வைக்கதான் ஆசை. என ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அஜித்.
பைக் ரேஸில் வாய்ப்பை இழந்த அஜித்:
அதே போல பைக் ரேசில் அதிக ஈடுபாடு கொண்டவர் அஜித். சினிமாவிற்கு வந்த காலக்கட்டம் முதலே பைக் ரேஸிலும் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பைக் ரேஸை விட்டு விலகினார். இதற்கு அப்போது மக்கள் மத்தியில் பல காரணங்கள் பேசப்பட்டன.
இதுக்குறித்து நடிகரும், ஸ்டண்ட் மேனுமான பயில்வான் ரங்கநாதன் கூறும்போது அவருக்கு அப்போது ஸ்பான்ஸர் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் அதுக்குறித்து என்னிடம்தான் புலம்புவார். அந்த சமயத்தில் பைக்கின் விலை ஒன்றரை கோடி வரை இருந்ததாம். அந்த அளவிற்கு அப்போது அஜித் சம்பளம் வாங்காததால் அவரால் பைக் ரேஸில் தொடர முடியவில்லை.
அதற்கு பிறகுதான் பத்திரிக்கையாளர்களிடம் தன்னை காட்டிக்கொள்வதையும் குறைத்துக்கொண்டார் அஜித் என கூறுகிறார் ரங்கநாதன். இதனால் நடிகர் அஜித்தால் தொடர்ந்து பைக் ரேஸிலும் இயங்க முடியாமல் போயிற்று.
இதையும் படிங்க: ராஜ்கிரண் ஹீரோ ஆனது யாரால் தெரியுமா?!.. இப்படி ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கா?…