பாக்கியராஜ் செய்த ஒரே தவறு அதுதான்!.. அதனால்தான் தோல்வி!.. இயக்குனர் கொடுத்த பேட்டி...

by சிவா |
k.bhagyaraj
X

பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து பின்னர் நடிகர் மற்றும் இயக்குனராக மாறியவர் கே.பாக்கியராஜ். 80களில் இவரின் கதை, திரைக்கதையில் உருவான படங்களுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. குறிப்பாக பெண்கள் பலரும் பாக்கியராஜின் ரசிகைகளாக இருந்தார்கள்.

நடிகனாகவே வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தாலும் ஒருகட்டத்தில் இயக்குனராகலாம் என முடிவெடுத்தார். ஆனால், பாரதிராஜா வற்புறுத்தியதால் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதேநேரம், வழக்கமான ஹீரோக்கள் செய்வது போல 4 பாட்டு, 4 ஃபைட் என செய்யாமல் திரைக்கதை மூலம் ரசிக்க வைத்தார்.

இதையும் படிங்க: சோறு போட்டு வளர்த்தா இதான் கதி! வடிவேலுவை பற்றி என்ன சொல்லியிருக்காரு பாருங்க கவுண்டமணி

இவரின் நடிப்பில் வெளியாகும் படங்களில் திரைக்கதைதான் பலம். காட்சிகளிலும் இருக்கும் தொடர்ச்சிதான் படத்தை ரசிக்க வைக்கும். பெரிதாக சண்டைக்காட்சிகள் இருக்காது. அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, சுவர் இல்லாத சித்திரங்கள் போன்ற படங்களில் சண்டைக்காட்சிகளே இருக்காது. ஆனாலும், படங்கள் ரசிக்க வைத்தது. இதனால்தான் பெண்களுக்கு இவரை பிடித்தது.

ஆனால், ஒருகட்டத்தில் இவரும் தனது படங்களில் அதிக சண்டைக்காட்சிகளில் நடித்தார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டியை மடிச்சு கட்டு படத்தில் சண்டை காட்சிகளில் என்னென்னமோ செய்தார். அந்த படம் ஓடவே இல்லை. அதோடு சரி. ஹீரோவாக நடிப்பதை நிறுத்திவிட்டார்.

gm kumar

இந்நிலையில், அவருடன் இணைந்து வேலை செய்தவரும், அறுவடை நாள், பிக் பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய படங்களை இயக்கியவருமான ஜி.எம்.குமார் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘பாக்கியராஜ் ஒரு திரைக்கதை மன்னன். ரசிகர்களுக்கு இது பிடிக்கும் என சரியாக கணிப்பதில் ஜீனியஸ். நாள் முழுக்க அவருடனே இருப்பேன். சில காட்சிகளை எதற்கு எடுக்கிறார் என்றே தெரியாது. ஆனால், ரிசல்ட்டை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

தூரல் நின்னு போச்சி படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகியுடன் பாக்கியராஜ் பேசிக்கொண்டிருக்கும்போது அதை நம்பியார் பார்த்துவிட்டு அவரை அடிக்கப்போவார். உடனே அவரிடம் சண்டை போட தயாராவார் பாக்கியராஜ். இந்த காட்சியை எடுத்தபோது ‘நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க?’ என நான் கேட்டேன். அதற்கு கோபப்பட்ட பாக்கியராஜ் ‘ஏன்யா நான் காமெடி மட்டுமே பண்ணனுமா?.. அது எவ்வளவு கஷ்டம் என தெரியுமா?.. நான் ஆக்‌ஷனும் பண்ணமும்’ என சொன்னார். எனக்கு தெரிந்த அவர் எடுத்த தவறான முடிவு அதுதான்’ என ஜி.எம்.குமார் சொல்லியிருக்கிறார்.

Next Story