இந்தியன் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்காததுக்கு இதுதான் காரணமாம்... இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!
உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996ல் வெளியான படம் இந்தியன். முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் பாடலுக்காக எடுக்கப்பட்ட படம் இது தான் என்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது ஏன் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
இந்தப்படம் ரிலீஸாகி 28 வருடமாயிடுச்சு. இப்போ 4கேல ரீ ரிலீஸ் ஆகியிருக்கு. இந்தியன் 2 படத்துக்கு முன்னாடி இதை ரிலீஸ் பண்ணினா அதோட தொடர்ச்சிக்கு இதைப் பார்த்துட்டு பார்ட் 2 பார்க்கறதுக்கு ஒரு தொடர்ச்சியைப் பார்த்த மாதிரி இருக்கும்.
ஸ்கிரிப்ட்டுக்கு எவ்ளோ பட்ஜெட் தேவைப்படுதுன்னு டைரக்டர் சொல்றதை வச்சித் தான் படம் எடுக்க முடியும். நான் பட்ஜெட் போட்டு கணக்குப் போட்டு பண்ணியிருந்தா இந்த மாதிரி படம் பண்ணியிருக்க முடியாது. ஏன்னா நானும் தெலுங்குல படம் எடுத்துருக்கேன். இந்தப் படத்துக்காக கமல் மேக்கப் போட ஐந்தரை மணி நேரம் ஆகியிருக்கு.
இதையும் படிங்க... ஹரா படத்துக்கு அதை நம்பி போனா ஏமாந்துருவீங்க… புதுசா கொஞ்சம் யோசிங்கப்பா…!
மேக்கப் வயதான தோற்றம் மாதிரி அப்படியே போட்டாலும் அதுக்கான பாடி லாங்குவேஜைக் கொண்டு வந்து கமல் அசத்தலாக நடித்து அந்தக் கேரக்டருக்கே உயிர் கொடுத்து விட்டார். இந்தப் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அப்போ எனக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் தெரியாது.
படம் பண்ணினோம். செலக்ட் ஆச்சு. அனுப்பிட்டோமே தவிர இந்தப் படத்தைப் பிராப்பரா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் படி ஃபாலோ பண்ணியிருந்தா கிடைச்சிருக்கலாம். இந்தப் படத்துக்கு கமல் சார் தான் முதலில் பேசியிருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரா கமல் இந்தியன் தாத்தாவாக வந்து அப்பவே மிரட்டியிருப்பார். அதற்கு கொஞ்சமும் சளைக்காத வகையில் இந்த வயதிலும் இந்தியன் தாத்தா வேடத்தில் அதே சிரத்தையுடன் மேக்கப் போட்டு நடித்து அசத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் உத்வேகத்துடன் மெனக்கிட்டு பைட் பண்ணியுள்ளார் என்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான்.
இதையும் படிங்க... ரஜினியோட அந்தப் படம் 3 படையப்பாவுக்குச் சமமா..? அப்புறம் ஏன் மிஸ் ஆச்சு?
இந்தியன் 2 அடுத்த மாதம் 12ல் வெளியாகிறது. இதையொட்டி சரியான சமயத்தில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இது 2 கே கிட்ஸையும் படத்திற்கு வரவழைக்கும் ஒரு உத்தி தான்.