தமிழ் சினிமாவில் பல ஆக்ஷன் ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே அது பக்காவாக பொருந்தும். அதுவும் ஸ்டைல், உடல் மொழி என அனைத்திலும் மாஸ் காட்டும் ரஜினிக்கு ஆக்ஷன் என்பது அல்லா சாப்பிடுவது போல. பாஷா படத்தின் சில காட்சிகளை ரசிகர்களை மெய் மறக்க வைத்தவர் அவர். அதனால்தான் இப்போதுவரை அப்படம் பற்றி பேசுகிறார்கள்.
மாஸ் என்பது எல்லோரும் அமைந்துவிடாது. ரஜினிக்கு இது இயல்பாகவே வந்துவிடும். ஒரு லுக்கில், ஒரு நடையில் அதை ரஜினி கொண்டு வந்துவிடுவார். அதனால்தான் சூப்பர்ஸ்டாரு நிகர் அவர் மட்டுமே என விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களும் பேட்டிகளில் கூறியுள்ளனர். இப்போது மாஸ் காட்டும் விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களும் ஒரு காலத்தில் ரஜினியின் ரசிகர்களாக இருந்தவர்கள்தான்.
இதையும் படிங்க: மதுரையில் நடந்த சம்பவம்!.. கடைசி வரை காப்பாத்தணும்!.. சூப்பர்ஸ்டார் விதை விழுந்தது அங்குதான்!..
இத்தனை வருடங்கள் கழித்தும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறார் ரஜினி. இப்படம் ரூ.400 கோடி வசூலை தாண்டிவிட்டது. இந்த வார இறுதிக்கு பின் ரூ.500 கோடியை தொட்டுவிடும் என விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை. அதைவிட ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளில் மட்டும் ஜெயிலர் படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதே உற்சாகத்தோடு தனது படத்திற்கு தயாராகி வருகிறார் ரஜினி. இது அவரின் 170வது படமாகும். லைக்கா நிறுவனம் தயாரிக்க, ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினிக்கு குறுக்கே வந்த நடிகர்!. தலைவர் 170 டைட்டிலை கூட சொல்ல முடியலயே!. இது என்னடா சோதனை!…
இப்படம் குறுகிய கால பட்ஜெட்டாக உருவாகவுள்ளது. ரஜினி 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம். போலி என்கவுண்டருக்கு எதிராக போராடும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கவுள்ளாராம். எனவே, ரஜினியின் நடிப்புக்கு தீனி போடும் காட்சிகள் நிறைய இருக்கும் என கணிக்கப்படுகிறது. அமிதாப்பச்சன் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும், பஹத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட சிலரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெய்பீம் படத்தில் போலீஸ் அதிகாரிகளின் அடக்குமுறையை காட்டிய ஞானவேல் வேட்டையன் படத்திலும் போலி என்கவுண்டர் விஷயத்தை தோலுரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித்னா யாரு? துரைமுருகன் கேட்டதற்கு பின்னாடி இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா? நிம்மதியை கெடுத்தவன சும்மா விடுவேனா?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…