தளபதி 68 படத்தின் கதை இதுதானாம்… ஓ இப்படி ஒரு ப்ளான் இருக்கா?

by Rajkumar |   ( Updated:2023-05-19 03:32:51  )
தளபதி 68 படத்தின் கதை இதுதானாம்… ஓ இப்படி ஒரு ப்ளான் இருக்கா?
X

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வரும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வாரிசு. கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். லியோ திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராவதால் இதற்கு அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கைதி,மாஸ்டர், விக்ரம் என வெற்றி படங்களாக கொடுத்துள்ளார்.

Vijay

Vijay

லியோ படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லி இயக்கத்தில் படம் நடிக்கவிருந்தார் விஜய். ஆனால் தற்சமயம் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் வெங்கட் பிரபு இயக்கி சமீபத்தில் வெளியான கஸ்டடி, மன்மத லீலை இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இருந்தும் தளபதி எதற்காக வெங்கட்பிரபுவுடன் கூட்டணி போடுகிறார் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் மாநாடு படமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அடுத்து விஜய் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருக்கிறார்..

எனவே அரசியல் சார்ந்து ஒரு படம் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். வெங்கட்பிரபு ஏற்கனவே அரசியல் சார்ந்து மாநாடு படத்தை இயக்கி அதை வெற்றி படமாகவும் ஆக்கியுள்ளார். எனவே அவர் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம் விஜய். எனவே அதிகப்பட்சம் இந்த படம் அரசியல் தொடர்பான கதைகளத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு நெருக்கமான இயக்குனர் – ஜெய்சங்கர் நடிக்க இருந்த படம்!.. எப்படி கைவிட்டு போச்சு தெரியுமா?..

Next Story