அப்பா - மகன் ஈகோவா? அரசியலா?.. தளபதி 68 பட கதை இதுதான்!..
நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், லியாகத் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த் என ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே விஜயை வைத்து பிகில் படத்தை தயாரித்துள்ளது. இது அவர்களின் தயாரிப்பில் விஜய் நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும். விஜய்க்கு இது அவரின் 68வது திரைப்படமாகும்.
தளபதி 68 படத்தின் கதை தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இப்படத்தின் கதை அரசியல் தொடர்புடையது எனவும், ஏற்கனவே, வெங்கட்பிரபு ரஜினிக்கு இந்த கதையை சொல்லி அவர் ‘இப்போது வேண்டாம்’என சொன்னதால், அதே கதையில்தான் விஜய் இப்போது நடிக்கவுள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இது அரசியல் படமல்ல. இப்படம் ஒரு அப்பா - மகன் இடையே இருக்கும் ஈகோ தொடர்புடையது என செய்தி கசிந்துள்ளது. இப்படத்தின் கதை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.